- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் !!
கொரோனா தொற்றுக்கு மத்தியில், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் ஆனி சிவனுக்குரிய சிறந்த மாதமாக கருதப்படுகிறது. வடமாநிலங்களில் சிவனுக்காக காவடி யாத்திரையை மேற்கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இது போன்ற மத நடவடிக்கைகளை தடை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவும் வகையில், கோவில் பிரசாதத்தை நாட்டின் எந்தவித பகுதிக்கும் அஞ்சல்துறை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஊரடங்கு நேரங்களில் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்கு, கோவில் பிரசாதத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் ஆன்லைன் மூலமாகவும் விநியோகிக்கப்படுகிறது. லட்டு பிரசாதத்தை பெற பக்தர்கள் ஆர்வமாக உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இதே போல், காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதத்தை அஞ்சல் துறை மூலம் பக்தர்களுக்கு வீட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவில் பிரசாதத்தை பெற, எந்தவொரு தபால்நிலையத்தில் (அஞ்சல்) இருந்தும் ரூ.251 க்கு மின்ணனு பண ஆணையை (EMO) வாரணாசியின் கிழக்கு பிரிவு மூத்த கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும். வாரணாசியில் சுவாமி தரிசனத்திற்கு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பிரசாத பார்சலில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஜோதிர்லிங்கம், மகாமிருதுஞ்சய மகா யந்திரம், சிவ சாலிசா, ருத்ராக் ஜெபமாலை, உலர்ந்த பழங்கள், சாம்பல் மற்றும் ஒரு பாக்கெட் இனிப்புகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.