- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி தானம் !!
அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பருவமழை காரணமாக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அசாமில் 28 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இதுவரை வெள்ளத்திற்கு 128 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால்,தனது டுவிட்டரில் கூறியது, அசாமின் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு, அக்ஷய் குமார் தனது பங்களிப்பாக, ரூ. 1 கோடி வழங்கியதன் மூலம் அசாமின் உண்மையான நண்பனாக உள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளார்.