அகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா

இந்திய இராணுவம் எமது தாய் மண்ணில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தி;க கொண்டிருந்போது அறப்போர் செய்யப் புறப்பட்டான் திலீபன் என்னும் போராளி. அவன் கைகளில் ஆயுதம் இருந்தது. தகுந்த பயிற்சி பெற்று இராணுவத்தை எதிர்த்து போரிடக்கூடிய வல்லமை உடலில் இருந்தது. அவனது உள்ளத்தில் உறுதியிருந்தது. ஆனால் அவன் உண்ணாவிரதமிருந்து என் இனத்திற்கு விடுதலை வேண்டும் என்பதற்காக, தொடர்ச்சியாக அறப்போரை நடத்தினான்.
அகிம்சை என்னும் அறப்போர் செய்யும் ஆயுதத்தை உலகிற்கு வழங்கிச் சென்ற மகாத்மா காந்தி பிறந்த மண்ணை அப்போது ஆண்டவர்கள் தன் போராட்டத்தின் மகிமையை உணர்ந்து கொள்வார்கள் என்று அவன் நம்பியிரு;ந்தான். நாட்கள் நகர நகர தன் உயிர் பிரிவதிலும் பார்க்க ஒரு அகிம்சைப் போராளியி;ன் கோரிக்கையை அந்த அயல்நாடு நிராகரிக்கின்றதே என்று கவலை அவனது மனதை ஆக்கிரமித்துக் கொண்டது. அதனால் யார் சொலலியும், அவனது தியாகம் தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்களுக்குத் தேவை என்பதை பலர் எடுததுக் கூறியும் தன் உயிர் பிரிவதைத் தவிர எதையுமே திலீபன் ஏற்றுக்கொள்ளவில்லை தன் அயல் நாட்டின் கோர முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என்று புறப்பட்ட அவனது தியாகத்தை தங்கள் கால்களால் மிதித்து விட்டு அந்த தேசத்தை ஆள்பவர்களுக்கு அடங்கி நடப்பதாக பாராளுமன்ற அரசியல்வாதிகள் தீர்மானம் எடுத்துவிட்டார்க்ள இப்போது.
அந்த அரசியல் தலைவர்களி;ன் பிரசன்னம் இலங்கையிலும் இந்தியாவிலும் அமெரி;க்காவிலும் அந்தந்த நாட்டை ஆள்பவர்கள் வேண்டுதல்களின் பேரில் ஒழுங்காகவே இடம்பெறுகின்றது. சொகுசுப் பயணங்கள், உல்லாசமான தங்குமிட வசதிகள், சுற்றுலாக்கள் என எல்லா இடங்களிலும் அவர்களுக்கு வரவேற்பு. ஆனால் வாக்களித்த மக்களோ வீதிகளிலும் காடுகளிலும் தாங்கள் இழந்தவற்றை பெறுவதற்காக மீண்டும் போராடிய வண்ணம்.
இந்த வேளையில் யாழ்;;;ப்பாணத்தில் இயங்கும் இந்தியாவிற்கான உதவித் தூதுவர் ஏற்பாடு செய்துள்ள “அகிம்சை”தொடர்பான விழா ஒன்றிலே பட்டிமன்றம் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. அதற்கு தலைமை தாங்க தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிறப்புப் பேச்சாளர். மேடையில் இரு பக்கங்களிலும் அமர்ந்திருந்து வாதிடுவதற்காக யாழ்;ப்பாணத்தில் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாக வீ;ற்றிருக்கும் சிலர். பட்டி மன்றத்தின் தலைப்பு மக்களை திசை திருப்புவதற்காக வேறு ஒரு விடயம் பற்றி விவாதிக்க இருக்கின்றது. அங்கு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளும் எமது உள்ளுர்ப் பேச்சாளர்களில் ஒருவராவது திலீபன் என்று அறப்போராளி தொடர்பாக ஓரிரு வரிகளையாவது உச்சரிப்பார்களா? அதையே இன்று உலகத் தமிழர்கள் எதிர்பார்;க்கின்றார்கள்.
இன்னொரு புறத்தில் “தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக திலீபன் போராட ஆரம்பித்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலை யிலும் இன்னமும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற பசி, தமிழ் மக்களினுடைய உரிமைகள் என்ற விடயம் போன்றன பின் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனவே தவிர அவற்றில் எந்தவித முன்னேற்ற ங்களும் ஏற்படவில்லை “என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரே~; பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக நல்லூ ரில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபி யில் இடம்பெற்றிருந்தது. இவ் அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற நிக ழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சுரே.பிரேமச்சந்த்pரன் தெரிவித்த கருத்துக்களையும் இவ்வார கதிரோட்டத்தின் இணைப்பாக எமது வாசகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்