world cup news: தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ்

நியசிலாந்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் தனது அசத்தலான ஆட்டத்தால் கிரிக்கட் இரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் காவியன் நரேஸ்.

கனடா அணியினர் முதல் 2 ஓவர்களுக்குள் 5 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களை இழந்து தடுமாறிய வேளை களமிறங்கிய காவியன் நரேஸ் 63 ஓட்டங்களை எடுத்து கனடா அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு தனது துடுப்பாட்ட திறனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட காவியன் நரேஸ் கொழும்பு N.C.C அணியில் மறைந்த பிரபல பயிற்றுவிப்பாளர் லயனல் மென்டிசிடம் 6 வயதிலிருந்தே இணைந்து பயிற்சி பெற்றவர்.

உள்ளூர் போட்டிகளில் மட்டுமல்ல சர்வதேச போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடி வரும் காவியன் நரேஸ் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார்

மேற்கிந்திய தீவுகள் அணியின் தெடக்க ஆட்டகாரரை இவரே வீழ்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தமிழருக்கு பெருமை சேர்த்து வருகின்ற காவியன் நரேஸ் கனடாவின் கிரிக்கட் வீரர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உயர் விருதான MVP விருதையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment