பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை.

1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல் & டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை.

காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தி உள்ளது. 2020க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும் என்றார்.