- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

VARNAM SCHOOL OF MUSIC வர்ணம் இசைக் கல்லூரி நடத்திய 2016ம் ஆண்டுக்குரிய இசை விழா
சங்கீத வித்துவான், மிருதங்க வித்துவான் மற்றும் பல பணிகளை தன் தலை மேல் கொண்டு இந்த கனடிய மண்ணில் பிரகாசிப்பவர் கலைஞர்,குரு வர்ண ராமேஸ்வரன் அவர்களின்
VARNAM SCHOOL OF MUSIC வர்ணம் இசைக் கல்லூரி நடத்திய 2016ம் ஆண்டுக்குரிய இசை விழா இன்று மாலை கனடா கந்தசாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருநதினராக கலைஞர் வைரமுத்து திவ்வியராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் விழாவில் சிறப்புரையாற்றினார்.
இசைவிழாவில் தங்கள் பங்களிப்புக்களை வழங்கிய அனைத்து மாணவ மாணவிகளும் தங்கள் இசைப் பங்களிப்பை சிறப்பாகச் செய்தார்கள். குறிப்பாக குரு வர்ண ராமேஸ்வரன் அவர்களின்
VARNAM SCHOOL OF MUSIC வர்ணம் இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்கம் பயின்று வரும் மாணவ மாணவிகளின ஆற்றல் அளப்பரியது.
பெற்றோர் மற்றும் இசைச் செல்வங்கள்; குரு வர்ண ராமேஸ்வரன் அவர்கள் ஆகியோருக்கு கனடா உதயன் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.