தடுப்பூசி செலுத்தாதவர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதியில்லை

‘கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதி வழங்கப்போவதில்லை’ என, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கூறுகையில், ‘கனடாவில் தற்போது 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கப்போவதில்லை. எதிர்வரும் காலங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்’ என்றார்.