TWO BRANCHES OF “SARAVANAA BHAVAN” INDIAN RESTAURANT IN CANADA, CELEBRATED ANNUAL GET TOGETHER AND APPRECIATION NIGHT IN SCARBOROUGH.

The colorful event took place yesterday at Scarborough Convention Centre. The two branches are located in Mississauga and Scarborough.
கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் “சரவணா பவான் உணவகத்தின் இரண்டு கிளைகளும் நேற்று திங்கட்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள மண்டபத்தில் தமது வருடாந்த ஒன்றுகூடலையும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வையும் நடத்தின..
நிறுவனத்தின் அதிபர் திரு கணேசன் சுகுமார் மற்றும் பொது முகாமையாளர் திருமதி மீரா ஆகியோர் தமது சகாக்களுடன் சேர்ந்து மேற்படி நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
கனடாவின் மிசிசாகா மற்றும் ஸ்காபுறோ ஆகிய நகரங்களிலேயே மேற்படி இரண்டு கிளைகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் கௌரவிப்பு மற்றும் சிறந்த பணியாளர்களுக்கான விருதுகள் வழங்கும் வைபவம் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் ஆகிய இடம்பெற்றன.
அத்துடன் முக்கிய நிகழ்வாக சார்க் என்று அழைக்கப்படும் ஓட்டிசம் நோயால் பீடிககபபட்டுள்ள எமது பிள்ளைகளை பாராமரிக்கும் சேவையை ஆற்றிவரும் நிறுவனத்தின் தேவைகளுக்கு 7500 கனடிய டாலர் கள் கையளிககப்பட்டன. காசோலையை சார்க் நிறுவனர் திருமதி கீதா பெற்றுக்கொண்டார்.
மொத்தத்தில் நல்ல பல நோககங்களுக்காக கூடிய ஒரு மாலை சக இரவு வைபவமாக மேற்படி ஒன்றுகூடல் காணப்பட்டது.