கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேன்கனிக்கோட்டை தாலுகா பேட்டராய சாமி கோவில் தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடுகட்டும் வகையில் வருகிற 30-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாள் அன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.