டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில் படைத்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.
 23 வயதாகும் சுமித் அண்டில் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர். 2005  ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில்.