கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – விவசாய அமைப்பினர் அறிவிப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்கு பின் விவசாய அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ,
அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வழக்குகளை வாபஸ் பெறும் முன் போராட்டத்தை கைவிட்டால் அது எங்களுக்கு சிக்கலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கடிதம் எழுதிய நிலையில் வேளாண் சங்கம் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.