பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்க முதல் அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

பெட்ரோல் மீதான வரி குறைப்பால் 1,160 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

பெட்ரோல் வரிக்குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும்

தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369,09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும் என்று தெரி