அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.