சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டு  சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது.
அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது.. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது.
அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இதன் தொடர்ச்சியாகவே தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது.