நக்சலைட் தீவிரகவாதியாக கருதப்பட்ட ஸ்டேன் சுவாமி மறைந்தார் !!

பீமா கோரேகான் கலவர வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த சமூக ஆர்வலரும், நக்சலைட் தீவிரகவாதியாக கருதப்பட்ட பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

2017-ம் ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில், இருதரப்பினருக்கு மோதல் கலவரமாக வெடித்து. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கலவரத்தை தூண்டியதாக மனித உரிமைகள் ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமியை,84 என்பவரை, ஜார்க்கண்டின் ராஞ்சியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இடைக்கால ஜாமின் கோரி மனு செய்திருந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மும்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.