நைஜீரியாவில் மர்ம நபர்கள் தாக்குதல்: 34 கிராமவாசிகள் பலி

நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் அந்த கும்பல் தீ வைத்து எரித்து உள்ளது.  இதுபற்றி அறிந்த அரசு படை சம்பவ பகுதிக்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
இதன்பின்னர் எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளின் தீயை அணைத்தனர்.  6 பேரையும் மீட்டனர்.  இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தும்படி அரசு உத்தரவிட்டது.
2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதில் பலர் கொல்லப்பட்டும் மற்றும் கடத்தப்பட்டும் உள்ளனர்.