மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டிய ஜோபைடன் : வைரலாகும் வீடியோ

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.

இதில்கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி பேசிகொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், மோடிபின் இடது தோள்பட்டையை லேசாக தட்டினார். சட்டென திரும்பி பார்த்த மோடி உடனே பைடனை அழைத்து கை குலுக்கி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.