அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல – தலைமை செயலாளர்

அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இறையன்பு மேலும் கூறியிருப்பதாவது;-
திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான். அனைத்துத்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்புவது வழக்கமான நடைமுறையே. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கவே தரவுகள் திரட்டப்படுகிறது. அலுவல் ரீதியாக அனுப்பப்பட்ட கடிதத்தை அரசியல் சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.