இந்திய மந்திரி சபையில் மோடியின் அதிரடி மாற்றம் – இளமையும் அனுபவமும் !!

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்டவர்களில் பலர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதில், 36 பேர் புதுமுகங்கள். 7 பேர் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்கள். அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.