IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கில் தடுமாற்றம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம் !! மான்செஸ்டரில் இந்திய அணியின் 269 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு திணறடித்து வருகிறது.

15 ஓவர்களின் முடிவில் மேற்கிந்தியதீவுகள் 50 / 2 !! இரண்டு விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத்தீவுகள் ரன்குவிப்பில் பெரிதும் தடுமாறி வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் அந்த அணி 50 ரன்கள் எடுத்துள்ளது.

முகமது ஷமியின் புயல்வேக பந்துவீச்சில் மேலும் ஒரு விக்கெட் மேற்கிந்தியதீவுகள் அணியின் விக்கெட்கீப்பர் ஹோப் முகமது ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்.

அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெயில் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு மேற்கிந்தியதீவுகள் அணி 10 ரன்கள் எடுத்துள்ளது.