தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,688-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 1,668- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19,621- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,887- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,66,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,663 ஆக அதிகரித்துள்ளது.