முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், காலை 6 மணி முதல் சோதனை . சுமார் 12 மணி நேரம் நடைபெற்று வந்த இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது.

அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் ஒரு இடத்திலும், கோவையில் 2 இடங்களில் தற்போது சோதனை நிறைவடைந்துள்ளது.

இன்று நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியில் ஈடுபட்டுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.