முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார்.
 ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த சசிகலா தனது ஆறுதலைக் கூறினார். மனைவி மறைவு குறித்து சசிகலாவிடம் கூறும்போது, கண்கலங்கிய ஓ. பன்னீர்செல்வத்தின் கையைப் பிடித்து சசிகலா ஆறுதல் கூறினார்.