“Ethnic Press and Media Council of Canada” நடத்தியவருடாந்த இராப்போசன விருந்தில் கனடா உதயன் நண்பர்கள்

கனடாவில் இயங்கும் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் கழகமான “Ethnic Press and Media Council of Canada” தனது வருடாந்த இராப்போசன விருந்தை கடந்த வெள்ளிக்கிழமை 16ம் திகதி ரொரென்ரோ மாநகரில் நடத்தியது. ஒன்றாரியோ மாகாண முதல்வர் கௌரவகெத்தலின் வின் தனது அமைச்சர்கள் பலரோடு அங்கு வருகை தந்திருந்தார்.

கனடா உதயன் பிரதம ஆசிரியர் மேற்படி கழகத்தில் உபதலைவர்களில் ஒருவராக உள்ளார். மேற்படி இராப்போசன விருந்தில் அவர்கள் தனது நண்பர்களான சங்கர் நல்லதம்பி, விமல் நவரட்ணம், தாஸ் சாண்,கிருபாகிசான் ஆகியோரோடு கலந்துகொண்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான ஜிம் கரி ஜியானிஸ் அவர்களும் அங்கு கலந்து கொண்டார்.