பிரதமர் தலைமை மீது நம்பிக்கை எதிரொலி; மராட்டிய மேலவை வெற்றி: ஜே.பி. நட்டா பேச்சு

மராட்டிய மேலவை தேர்தலில் மொத்தம் 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை பா.ஜ.க. வென்றது.  இதுபற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசும்போது, மராட்டிய மேலவை தேர்தலில் பெற்ற வெற்றியானது பிரதமர் மோடியின் தலைமை, அவரது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என பேசியுள்ளார்.

இதற்காக பா.ஜ.க.வின் மராட்டிய தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அனைத்து மராட்டிய பா.ஜ.க. தொண்டர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.