பிரிவினைவாத சக்திகளுடன் இனைந்து பணியாற்ம் திமுக – பா.ஜ.,வின் இப்ராகிம்

”சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது,” என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.

மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., வின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை போலீசை பயன்படுத்தி, கைது செய்யும் படலத்தை அரசு துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது.

கடந்த காலத்தில், முஸ்லிம்களை தவறாக பயன்படுத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததையும், தேசத்திற்கு எதிரான செயல்களை சில அமைப்புகளும், அதன் தலைவர்களும் முன்னெடுக்கும் போது, அதற்கு பக்கபலமாக தி.மு.க., இருந்ததையும் விளக்கி, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவினர் பிரசாரம் செய்வர். இவ்வாறு, அவர் கூறினார்.