டெல்லியில் ஒரே மாதத்தில் 1,200 பேருக்கு டெங்கு பாதிப்பு

தலைநகர் டெல்லியை டெங்கு காய்ச்சல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அங்கு இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்து 530 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆயிரத்து 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது 4 ஆண்டுகளில் அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
டெல்லியில் டெங்குவால் நேற்று முன்தினம் 5 பேர் இறந்திருக்கின்றனர். இதனால் இக்காய்ச்சலால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவும் 4 ஆண்டுகளில் அதிகம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.