Go to ...
Canada Uthayan Tamil Weekly
* அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்    * 'தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'    * வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்    * பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலி    * டோரோனோடோ டாக்டர், நோயாளியை தவறான இடங்களை தொட்டும், முத்தம் இடும்போது பிடிபட்டு லைசென்ஸை இழந்தார்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Wednesday, October 18, 2017

Delta Academy கீழ் இயங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா


கனடா ஸ்காபுறோ நகரில் நீண்ட கால திருமதி தங்கேஸ்வரி மகேஸ்வரன் அவர்களால் நிர்வகிக்கப்படும் Delta Academy Inc. ஐnஉ. இன் ஒரு அங்கமாக விளங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மற்றும் கலை நிகழ்வுகளின் சங்கமம் ஆகியன கடந்த ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி 1160 பேர்ச் மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள அக்கடமியின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் அகணி சுரேஸ், சிவன் இளங்கோ மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம், மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர் சூ வொங் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.


பல்வேறு சங்கீத நடன ஆசிரிய ஆசிரியைகளின் வழி நடத்தலில் சங்கீதம், நடனம் மற்றும் வாத்தியக் கருவிகள் ஆகியவற்றைப் பயிலும் மாணவ மாணவிகளின் கலைப் படைப்புக்கள் மேடையில் நிகழ்த்தப்பட்டன. அவை அனைத்தும் தரமானவையாகவும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிதானவையாகவும் காணப்பட்டன.
மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள், நிர்வாகி திருமதி தங்கேஸ்வரி மகேஸ்வரன் அவர்களுக்கும் மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தார்கள்.கலைப் பங்களிப்பும் கௌரவமும் கலந்த ஒரு இனிய மாலை நிகழ்ச்சியாக நேற்றைய விழா இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது.இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.

TEKNO MEDIA INC. என்னும் தமிழர் நிறுவனத்தின் மக்கள் நலன் சார்ந்த பணிகள் தொடர்கின்றன.

 

TEKNO MEDIA INC. என்னும் தமிழர் நிறுவனத்தின் பெயரை அறியாத தமிழ் மக்கள் கனடாவில் ஒருவருமே இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த நிறுவனத்தின்; அதிபர் திரு மதன் அவர்களும் TEKNO MEDIA நிறுவனமும் இங்கும் எங்கும் தமிழர் முயற்சிகளுக்கு என்றும் பக்க ஆதரவாக இருந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக எமது தாயகத்தில் கல்வி மறுக்கப்பட்டும், கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் மாணவச் செல்வங்களுக்கு உதவும் வகையிலும் பல இலட்சம் டாலர்களை அர்ப்பணித்து செயலாற்றுபவர் திரு மதன் அவர்களும் அவரது பாரியார் தர்மினி அவர்களும் வுநுமுNழு ஆநுனுஐயு நிறுவனமும் தான் என்றால் அது மிகையாகாது. அதே போலவே இங்கும் தாயகத்திலும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் பயனளிக்கும் வகையில் சேவையாற்றும் பல் துறை சார்ந்தவர்களை பாராட்டிய வைபவம் கடந்த சனிக்கிழமை 20ம் திகதி மாலை பிரம்டன் மாநகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது பல ஊடக நண்பர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் தமிழ் மொழி மீது பற்று கொண்டு உழைத்து வரும் சிறார்கள் என பலர் பாராட்டப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டார்கள்.
இதுவரை காலமும் TEKNO MEDIA  நிறுவனம் தாயகத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உதவி வரும் புஸ்பா நிதியம் அமைப்பிற்கு 250000.21 டாலர்களும் ஸ்காபுறோ நகரில் இயங்கும் ஓட்டிசம் நோயால் பாதிப்புற்ற எமது செல்வங்களுக்கு உதவும் South Asian Autisum Awareness Centre நிறுவனத்திற்கு 60000.22 டாலர்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2