கொரோனா தடுப்பு மாத்திரைகள் இங்கிலாந்து அரசு ஒப்புதல்

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.  தடுப்பூசியை விட மாத்திரை தயாரிப்பது எளிது என்பதால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த மாத்திரையை பயன்படுத்தும் முதல் நாடானது இங்கிலாந்து.