தமிழகத்தில் மேலும் 1,509-பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும், 1,509-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தொற்று பாதிப்பு 1,512- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில்  இன்று 177- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,719- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 54 ஆயிரத்து 718- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,620- ஆக உள்ளது.