நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது – கிறிஸ்துவ பாதிரி

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம்.. பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம்.. ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு… பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம்.. (கைதட்டுகின்றனர்) நமக்கு சொறி, செரங்கு வந்துட கூடாதுனு தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது.. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆளு.. சொறி பிடிக்கும்.. செரங்கு பிடிக்கும்.. அதனால செருப்பு போட்டுக்கங்கனு கொடுக்கிறாங்க – கிறிஸ்துவ பாதிரி

‘நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது’ என சர்ச்சையாக கூறியிருக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், பிரதமர் மோடியையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்தி, மதவெறியை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பிரார்த்தனை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லீம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட முளகுமூடு மறைமாவட்ட சர்ச்சில் பங்குதந்தையாக உள்ள ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எத்தனை கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், எத்தனை கோவிலுக்கு சென்று துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும், இந்துக்கள் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள்.. (கூட்டத்தினர் கை தட்டுகின்றனர்) மண்டைக்காட்டு அம்மன் பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கவில்லை.. திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை.. இதை மறந்து விடாதீர்கள்.. (பலமாக கைதட்டுகின்றனர்)

உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை.. அனைத்து எம்.எல்.ஏ.,க்களிடமும் கூறினேன்.. பிரின்ஸிடமும் கூறினேன்.. உங்களுக்கு ஓட்டு போட சொன்னது யாரு.. எங்கள் ஆயர்கள் எங்க கண் அசைப்பார்கள்.. கிறிஸ்தவ ஊழியர்கள்.. பெந்தகோஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பார்கள்.. நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில், சுரேஷ் ராஜனிடம் (திமுக மாவட்ட செயலாளர் – கன்னியாகுமரி) கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினோம். அவரோ, வேண்டாம் பாதர்.. ஒருவேளை இதனால் ஹிந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது (கூட்டத்தினர் சிரிக்கின்றனர்) என்று மறுத்துவிட்டார். இதனால் எம்.ஆர்.காந்தி (பா.ஜ.,) நாகர்கோவிலில் ஜெயித்துவிட்டார். (கைதட்டுகின்றனர்)

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம்.. பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம்.. ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு… பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம்.. (கைதட்டுகின்றனர்) நமக்கு சொறி, செரங்கு வந்துட கூடாதுனு தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது.. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆளு.. சொறி பிடிக்கும்.. செரங்கு பிடிக்கும்.. அதனால செருப்பு போட்டுக்கங்கனு கொடுக்கிறாங்க. அழகாக சொன்னார்கள் இஸ்லாமியர்கள்.. ‘எங்கள் முடியை.. (சற்று சிந்திக்கிறார்.. கூட்டத்தினர் ரோமத்தை என குரல் எழுப்புகின்றனர்) ரோமத்தை.. எங்கள் பாஷையில், எங்க மயிரை கூட நீங்க பிடுங்க முடியாது.. (பலமாக கைதட்டுகின்றனர்) அதான் அர்த்தம்.. பைபிள்ளயே இருக்கு.. ஒரு மயிரை கூட நீ பிடுங்க முடியாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாங்கள் மெஜாரிட்டி 42 சதவீதத்தில் இருந்தோம்.. இப்போது அது 62 சதவீதத்தை தாண்டி விட்டது.. விரைவில் அது 70 சதவீதத்தை தொட்டு விடும்.. (பலத்த கைதட்டல்) நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்போம்.. உங்களால் அதை தடுக்க முடியாது.. அதனை மிகவும் எச்சரிக்கையாக ஹிந்து சகோதரர்களுக்கு நாங்கள் சொல்லி கொள்கிறோம்.. ஆர்.எஸ்.எஸ்.,காரன் என்றாலும் சரி, பா.ஜ.,காரன் என்றாலும் சரி எங்களுக்கு கவலையே கிடையாது.. நீ எங்களை தடுக்க முடியாது.

பிரதமர் மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும். (பலமாக கைதட்டுகின்றனர்) எழுதி வைத்து கொள்ளுங்கள்.நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும்… வரலாறு காணும். (பலமாக கைதட்டுகின்றனர்) எங்களது சாபம் உங்களை அழிக்கும்; நிர்மூலமாக்கும். இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

அமைதியையும், அன்பையும் போதிக்கும் நிறைய பாதிரியார்கள் மத்தியில், இவர் போல இப்படி மததுவேஷம் பேசுபவர்களால் தான், நாட்டில் மத சண்டைகள் வந்து இப்படி கஷ்டப்படுகிறது. மதவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.