இந்திய மருத்துவர் சங்கத்தின் கிறிஸ்துவ தலைவர் கூறினார் – ஹிந்து திருவிழாக்கள் நடத்தினால் ஆபத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திருவிழாக்களை நடத்துவது நல்லதல்ல, அது மிகவும் அபாயகரமானதாக அமைந்துவிடலாம் என, இந்திய மருத்துவர் சங்கத்தின் கிறிஸ்துவ தலைவர் ஜெயலால் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசின் இரண்டாம் அலை குறைந்தாலும், மூன்றாம் அலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.எனவே, நாம் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

நாட்டின் பல் வேறு பகுதிகளில் கொரோனாவின் தீவிரத்தை உணராத மக்கள், சமூக இடைவெளியை சிறிதும் பின்பற்றாமல், பொது இடங்களில் அதிக அளவில் கூடுகின்றனர். சுற்றுலா, யாத்திரை, மதம் சார்ந்த நிகழ்வுகள் உள்ளிட்டவை அவசியம் தான். எனினும் இதற்கு இன்னும் சில மாதங்கள் நாம் காத்துஇருக்கலாம்.இந்த நேரத்தில் மதத் திருவிழாக்களை நடத்துவது நல்லதல்ல; அது மிகவும் அபாயகரமான தாக அமைந்து விடலாம். வைரஸ் வேகமாக பரவுவதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாகி விடலாம். எனவே, குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு, இதுபோன்ற கூட்டம் சேரும் நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், உத்தர பிரதேசத்தில் வருடாந்திர ‘கன்வார்’ யாத்திரைக்கு, அரசு அனுமதி வழங்கி உள்ளது.