சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை – தளர்வுகள் அறிவிப்பு

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில்அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்து இருந்தநிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.