மனிதனின் சமூக நடத்தையை தீர்மானிப்பது கல்வி அறிவு

மனிதனின் சமூக நடத்தையை தீர்மானிப்பது கல்வி அறிவு

ஆதிகாலத்தில் இருந்து கல்வியானது மனித குலத்தில் பின்னிப்பிணைந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. மனிதனது கூட்டுவாழ்க்கை, வளர்ச்சி,செயன்முறை ஆகிய அனைத்திலும் கல்வி செல்வாக்குச் செலுத்துகின்றது. இன்று உலக அரங்கில் பழைமையில் பெருமளவு ஊறியிருந்து நவீனமாக்கிக் கொள்ளும் செயன்முறைக்கு கல்வி பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. இவை அனைத்தும் கல்வியின் சமூக செயலாகவே அமைகின்றன. சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கும் கல்வி விடைகாணும் தன்மை கொண்டது. அதன்படி கல்வியில் மாணாக்கரை முழுமையான இயல்புடையவர்களாக உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். கல்வியும் சமூகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதனை ஜே.எம்.கில்டர் என்பவர் முதன் முதலில் வெளிப்படுத்தினார். இதனை மையமாகக் கொண்டு தற்கால கல்வித் திட்டங்கள் அமைந்துள்ளன. கல்வியினால் சமுதாயத்தை சிறப்பாக உருவாக்க முடியும்….

Read More

தமிழ்மொழியின் உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ்மொழியின்  உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் செல்லையா கோடீஸ்வரன் தனது 85வது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். தென்னிலங்கையில் உள்ள வத்தேகமவில் பிறந்த அவர் யாழ். மீசாலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரச சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்ட அவர், தமிழ்மொழி மீதும், தமிழ் சமூகம் மீதும் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கினார். தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ‘அரச சேவையிலிருந்த தமிழ் அலுவலர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சியடைய வேண்டும். தவறினால் படி, பதவி உயர்வுகள் மறுக்கப்படுவதுடன் சேவையிலிருந்து எதுவித இழப்பீடுகளும் இன்றி நீக்கப்படுவார்கள்’ என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது கேகாலை கச்சேரியில் பணிபுரிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் குறித்த விதிக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்….

Read More

ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்கள் எவை? ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு விளக்குகின்றார்

ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்கள் எவை?   ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு விளக்குகின்றார்

தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை இலக்கியம் பண்பாடு உணவு பழக்க வழக்கம் விளையாட்டு என்பன சிறப்பான இடத்திற்குரியவை. ஒருவகையில் ஒரு தேசிய இனத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோல்களாகவும் இவைகள் உள்ளன. ஒரு பொது மூலத்தில் இருந்தே ஊரடவரசந என்ற பதம் பிரெஞ்சு, லத்தீன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரயோகத்திற்கு வந்தது. இதன்படி நிலத்தை உழுவது, பயிரை வளர்ப்பது, உடல்நலத்தைப் பேணுவது என்ற மூலப் பொருளில் இருந்து இதன் தோற்றம் அமைந்தது. இதன் அடிப்படையில் நடத்தைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், மனப்பாங்கு விருத்தி போன்ற பொருளடக்கமும் இணைந்து கொண்டது. மேலும் மொழி, சம்பிரதாயங்கள், கலை அம்சங்கள் என்பனவும்…

Read More

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

இராஜாங்கப் பயணமாக இந்தியா சென்ற சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்! முகமது பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்படும் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்… பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு சவூதிக்கு சென்ற போது இருதலைவர்களிடையே நீடித்த நட்புறவை வெளியுறவுத்துறை நினைவுகூர்ந்துள்ளது. ரத்தினகிரி சுத்திகரிப்பு திட்டத்துக்காக சவூதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது,…

Read More

தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்

தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்

2000ம் ஆண்டு கனடாவில் பிறந்த சாருதி ரமேஷின் பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை. அவர்கள் சிறு வயதிலிருந்தே சாருதியை ஒரு மகளாக அன்பு செலுத்தி வளர்த்தாலும் தீரச்செயல்களுக்கு வித்திடக் கூடியதாக, கராட்டி நீச்சல் போன்ற விளையாட்டுகளிலும் பயிற்றுவித்தார்கள். தனது கல்வி தொடர்பான விடயங்களிலும் மிகுந்த அக்கறை கொண்ட சாருதி வாசிப்பிலும் கூடிய நேரத்தை ஆர்வத்துடன் கழித்தார். சிறுவயதிலிருந்தே அனைத்து விடயங்களிலும் சமாந்தரமாக கவனம் செலுத்திய அவரிடம் எழுத்தாற்றல் உருவாகியுள்ளதை அவரது பெற்றோர் அவதானித்தார்கள். குறிப்பாக அவரது தாயார் மிகுந்த அக்கறையோடு தங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தார். தந்தையார் ரமேஷ் அவர்களும் தனது தொழில் முயற்சிகளில் கவனமாக இருந்து, பொருளாதாரம் என்னும் செல்வத்தைத் தேடிக்கொள்ள,…

Read More

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு

கனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். அந்த வகையில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம்-கவ்தார் பாருஹ் என்ற தம்பதி தங்களின் குழந்தைகளான அகமது (வயது 15), ரோலா (12) முகமது (9) ஓலா (8) ஹாலா (3) ராணா (2) ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் தஞ்சம் புகுந்தனர்….

Read More

பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த இந்திய அரசு முடிவு

பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த இந்திய அரசு முடிவு

இந்தியா-பாக்.இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலால் பாக். மீது இந்தியா கடும் ஆத்திரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியா-பாக்.நிதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ராவி நதியில் இருந்து உபரிநீரை பகிர்வதை நிறுத்தப்படும். இனி பாக்.கிற்கு வழங்கப்பட்டு வந்த நதிநீர் பங்கீட்டினை தடுத்து நிறுத்தி அதனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி…

Read More

கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்

கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்

’உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ எது என்ற கூகுள் தேடலுக்கு பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இந்தியப் படைகள் மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இது என்று கருதப்படுகிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பு, புல்வாமா தாக்குதல் நடைபெற்ற…

Read More

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட 64 பேரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள இந்த குடியேற்றவாசிகளை தேசிய…

Read More

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதிகள்…

Read More
1 4 5 6 7 8 81