கெளரவ டாக்டர் பட்டத்தை மறுத்த டிராவிட்! கொண்டாடும் ரசிகர்கள்!

கெளரவ டாக்டர் பட்டத்தை மறுத்த டிராவிட்! கொண்டாடும் ரசிகர்கள்!

கெளரவ டாக்டர் பட்டம் என்பது திறமை, பங்களிப்பு மற்றும் பிரபலம் போன்றவற்றுக்கான முக்கியமான அங்கீகாரம். இந்தக் கெளரவத்தை வேண்டாம் என்று சொல்லி மறுத்துள்ளார் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிடின் பல சாதனைகளுக்குக் கெளரவம் செய்யும் விதமாக அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கர்நாடகாவின் பெங்களூர்ப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. ஆனால் இதைப் பெற மறுத்துவிட்டார் டிராவிட். தானே தன் சொந்த முயற்சியில் விளையாட்டுத் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டத்தை வாங்கிக்கொள்வதாகப் பல்கலைக்கழகத்துக்குப் பதில் அளித்துள்ளார். இந்தத் தகவல் சமூகவலைத்தளத்தில் வெளியானவுடன் டிராவிடுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர் என்று ரசிகர்கள் டிராவிடைக் கொண்டாட இன்னுமொரு காரணமாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

Read More

எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டொனால்டு டிரம்ப், மெக்சிகோ எல்லையில் சுவர், அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட திட்டங்களில் நடப்பு வாரத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், சில முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயருவதற்கு தற்காலிக தடைவிதிக்கவும் டிரம்ப் உத்தரவிட உள்ளதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. தேச பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவற்றில் ஒன்று மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்பதாகும். தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக இதை டிரம்ப் கூறி வந்த நிலையில், இந்த உத்தரவை பிறப்பிக்க போவதாக நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் செய்தி…

Read More

இரானி கோப்பை சகா சதம்

இரானி கோப்பை சகா சதம்

குஜராத் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியின் விரிதிமன் சகா சதமடித்துகைகொடுத்தார். ரஞ்சி கோப்பை ‘நடப்பு சாம்பியன்’ குஜராத், ‘ரெஸ்ட் ஆப்இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட்போட்டி மும்பையில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் குஜராத் 358, ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ 226 ரன்கள் எடுத்தன. மூன்றாம்நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் குஜராத் அணி 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த குஜராத் அணிக்கு ஹர்திக்படேல் (0) ஏமாற்றினார். சிராக் காந்தி (70) நம்பிக்கை தந்தார். இரண்டாவது இன்னிங்சில் குஜராத்அணி 246 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ சார்பில்…

Read More

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாகஇல்லாதொழிக்குமாறும், அனைத்துலக குற்றவியல்நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நாவின் சிறப்புஅறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார். சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும்நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்புஅறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் சிறிலங்காவுக்குமேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2016 ஏப்ரல் 29ஆம் நாள் தொடக்கம், மே 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் மேற்கொண்டபயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைவரும், மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவதுஅமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை சிறிலங்கா உடனடியாக இல்லாமல்ஒழிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக…

Read More

டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்

டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்

வாஷிங்டன், டிரம்ப் மீது குற்றச்சாட்டு அமெரிக்க நாட்டின் 45–வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (வயது 70) கடந்த 20–ந் தேதி பதவி ஏற்றார். தேர்தலுக்கு முன்பாகவே அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக பெண்கள், குடியுரிமை, முஸ்லிம்கள் தொடர்பான அவரது பார்வையும், கருத்துகளும் கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தன. குறிப்பாக பெண்களை பாலியல் ரீதியில் மோசமாக பார்க்கிற நடத்தை கொண்டவர் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 10–க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். வாஷிங்டனில் பேரணி இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அவர் பதவி ஏற்ற பின்னரும் அவருக்கு எதிராக பல தரப்பினரும்…

Read More

அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு – விழா கமிட்டி அறிவிப்பு

அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு – விழா கமிட்டி அறிவிப்பு

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற போராடிய அனைவருக்கும் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரை: வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் செல்லமாட்டோம் என்று கூறி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் போராட்டம் புரட்சியாக மாறி வெடிக்கவே, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டசபையில் இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்….

Read More

இந்த வார (01/20/2017) இ-பேப்பர்

இந்த வார (01/20/2017) இ-பேப்பர்

இந்த வார (01/20/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

தாரள சிந்தை கொண்ட “மின்னல்” செந்தில் குமரனின்முயற்சியால் இதய நோயினால் பாதிக்கப்பட்ட அமுத செல்வியின் உயிராபத்து நீங்கியது

தாரள சிந்தை கொண்ட “மின்னல்” செந்தில் குமரனின்முயற்சியால் இதய நோயினால் பாதிக்கப்பட்ட அமுத செல்வியின் உயிராபத்து நீங்கியது

கனடாவில் வாழ்ந்து கொண்டு தனது தாரள சிந்தையால்  அனைவரையும் கவர்ந்துள்ள “மின்னல்” செந்தில் குமரனின் முயற்சியால் இதய நோயினால் பாதிக்க்பட்ட இலங்கையில் கிழக்கு மாகாண கிராமமான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அமுத செல்வியின் உயிர் காப்பாற்றப் பட்டது. இங்கே காணப்படும் படங்களில் அவருக்கான இதய சத்திர சிகிச்சை வைத்தியசாலை மேற்கொள்ளப்பட்டதை இங்கே காணப்படும் படம் மூலம் அறியலாம். மேற்படிஉயிர்காக்கும் திட்டத்திற்கு 14000 ஆயிரம் டொலர்களை விருப்பத்தோடு வழங்கி உதவிய கனடா வாழ் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் திரு.செந்தில் குமரன் நன்றி தெரிவிக்கின்றார். அவரை வாழ்த்த விரும்புவோர் 416 200 7652 என்றும் இலக்கத்தை அழைக்கவும்.

Read More

ஓன்றாரியோ குயின்ஸ்பார்க் வளாகத்தில் மாகாண லிபரல் அரசு நடத்திய தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டம்

ஓன்றாரியோ குயின்ஸ்பார்க் வளாகத்தில் மாகாண லிபரல் அரசு நடத்திய தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டம்

நேற்று முன்தினம் புதன்கிழமை 18ம் திகதி மாலை ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நடைபெற்றது. கனடிய தமிழர் சமூகத்தின் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு கலந்து கொண்டனர்.  முக்கியமாக தற்போது இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள வடக்கு மாகாண சபையில் கல்விஅமைச்சர் திரு குரு குலராஜா, சுகாதார அமைச்சர் திரு சத்தியலிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் கல்விஅமைச்சர் திரு தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முதல்வர்…

Read More

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் யாழ் இந்து ஆரம்ப பாட சாலை முன்னாள் உப. அதிபர் திருமதி. சரஸவதி ஆறுமுகம் அவர்களின் நினைவாக வைத்தியா சாலை பெண்கள் வாட் 02 இல் நோயாளர் ஆறுதல் பெறுவதற்கான பூங்கா அமைக்கப்பட்டு வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா திறந்துவைத்தார்.  நினைவுப் பூங்கா அமரரது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள், எமது தாயகத்தின் சுய நலமற்ற சமூக சேவையாளரும் கல்விமானுமாகிய திரு ஆறு திருமுருகன் அவர்களது தாயார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.

Read More
1 57 58 59 60 61 68