அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமாவில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. பேரிடர் நிவாரண படையினர் உடனடியாக அங்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூறாவளியானது ஜார்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குழந்தைகளும் உள்ளனர். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Read More

ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஆடல், பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மக்கள் திரளாக பங்கேற்று விடிய, விடிய கொண்டாடினர். ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, இன்று (4 ம் தேதி ) மாலை, 6:00 மணிக்கு துவங்கியது; காலை, 6:00 மணி வரை நடக்கிறது. விழாவில் ஜனாதிபரதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல் நிகழ்வாக லிங்க பைரவி கோவிலில், தீபாராதனை நடந்த பின், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த, 40 ராணுவ வீரர்களின் நினைவாக, ஜனாதிபதி மற்றும் சத்குரு இருவரும் இணைந்து ஈஷா…

Read More

இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் இன்று(மார்ச் 1) இரவு 9.17 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில், பாகிஸ்தான் இருமுறை காலதாமதம் செய்து இரவில் தான் ஒப்படைத்தது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின், பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், நேற்று முன்தினம், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தன. பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது….

Read More

தற்கால நவீன மருத்துவம் நோயாளருக்கு வரப்பிரசாதம் என்பதே உண்மை

தற்கால நவீன மருத்துவம் நோயாளருக்கு வரப்பிரசாதம் என்பதே உண்மை

இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் தற்போது அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளரை பரிசோதனைக்கு உட்படுத்த அதிதொழில்நுட்பம் பொருந்திய மருத்துவ சாதனங்கள் உள்ளன. ஆனாலும் உலக மக்களை அச்சுறுத்தும் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். அதே ஆண்டில் ஐரோப்பாவிலும் இந்த நோய் பரவியுள்ளமை தெரியவந்தது. எவ்வாறாயினும் இந்நோய் முதன் முதலில் உகண்டா, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில்தான் தோன்றியது எனக் கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக நகர்ப்புறங்களில் இயங்கும் விபசார விடுகளுக்குச் செல்பவர்கள் எச்.ஐ.வி வைரஸ் தாக்கத்துக்குள்ளாகின்றனர் எனலாம். ஆட்கொல்லி நோயான எய்ட்ஸை முழுமையாக இல்லாவிட்டாலும் அது பரவும்…

Read More

மனிதத்தைத் தங்கள் மனங்களிலிருந்து அகற்றி விட்ட தமிழ் மணணின் மைந்தர்கள்

மனிதத்தைத் தங்கள் மனங்களிலிருந்து அகற்றி விட்ட தமிழ் மணணின்  மைந்தர்கள்

தமிழ் மொழியும் தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் உலக நாடுகளில் போற்றிக் கொண்டாடப்படுகின்றது. அந்தக் கொண்டாட்டங்களுக்காக கனடாவில் மத்திய மாநில அரசுகள் நிதி உதவிகள் வழங்குகின்றன. எமது மொழியை கொண்டாடவும் எமது கலைகளை மேடையேற்றவும் சுதந்த்pரமாகவும் உரத்தும் எங்கள்; மொழியில் பேசவும் பாடவும் இங்கே வெளிப்படையான அங்கீகாரம் உண்டு. ஆனால் எமது பிறப்பிடமாகக் கருதப்படுகின்றன வடக்கு என்னும் தமிழர் பூமியில் மனிதம் தொலைந்து விட்டதாலும் அங்கு வாழும் பலர் தங்கள் மனங்களிலிருந்து மனிதம் என்னும் பண்பாட்டுப் போர்வையை எடுத்து தெருவில் வீசிவிட்டதாலும் அங்கு வாழும் ஒரு பூவுள்ளம் (பெண்) எவ்வாறு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றது என்பதை அந்த பெண் மனம் அழுதபயும் கொதி;க்கும் உள்ளத்துடனும்…

Read More

அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடு!!!

அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில்  ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடு!!!

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 6ம், 7ம் (தொடக்க விழா 5-ம் திகதி) திகதிகளில், அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிக்காகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. தனிநாயகம் அடிகள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வண.சேவியர் தனிநாயகம் என்னும் ஈழத்து தமிழறிஞரால் 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம். தமிழறிஞராக மட்டும் அல்லாமல் மிகச் சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தவர் அவர். ஆங்கிலம்,ரோமம், போர்ச்சுக்கீஸ், பிரெஞ்ச், ஜப்பனிஷ் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் வல்லமை பெற்றவர் தனிநாயகம் அடிகளார்….

Read More

பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது மூக்கை வெட்ட வேண்டுமா?

பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது  மூக்கை வெட்ட வேண்டுமா?

இந்தியாவின் காஷ்மீரி மாநிலத்தின் புல்வாமா பகுதியில் மத்திய றிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்களைப் பலியெடுத்த படுமோசமான தற்கொலைக்குண்டு தாக்குதலையடுத்து இந்தியா பெரும்பதற்றமடைந்திருப்பதுடன் வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணமே சகலரிடமும் இருப்பதையும் விளங்கிக்கொள்ளமுடியும். பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்குகின்றமைக்காக பாகிஸ்தானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பதென்பது குறித்து இந்திய அரசாங்கம் யோசித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பாகிஸ்தானுடன் எஞ்சியிருக்கும் சொற்பமான விளையாட்டுத்துறை உறவுகளையும் கூட துண்டித்துவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. அதற்கு நச்சுத்தனமான பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஒரு சில தொலைக்காட்சி சேவைகள் திட்டமிட்டவகையில் ஊக்கம் கொடுத்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்திய – பாகிஸ்தான் முரண்நிலை தீவிரமடைகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருநாடுகளுக்கும் இடையிலான விளையாட்டுத்துறை உறவுகள் குறிப்பாக, கிரிக்கெட் உறவுகளே முதலில்…

Read More

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின் போது, தான் வந்த விமானத்தின் பெயரையும், எதற்காக வந்தேன் என்பதையும் தெரிவிக்க முடியாது என அபிநந்தன் கூறியுள்ளார். அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் வியந்தனர். இது குறித்த வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற விமானி அபிநந்தன் என்பவர் மாயமானார். அவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறி சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் உறுதித்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. அந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புவதும், அதற்கு…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகரில் வருகிற 27, 28 தேதிகளில் நடக்கிறது. இதற்காக கிம் ஜாங் அன், 24 ஆம் தேதி மாலை தலைநகர் பியாங்காங்கில் இருந்து தனக்கான சிறப்பு ரெயிலில் வியட்நாமுக்கு புறப்பட்டார். இரண்டரை நாள்கள் பயணம் செய்த கிம் ஜாங் அன், சீனா வழியாக இன்று வியட்நாம் வருகை தந்தார். சந்திப்பு நடைபெறும் ஹனோய் நகருக்கு, கார் மூலமாக பயணம் மேற்கொண்டார். கிம் ஜாங் அன்னுடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் சென்றனர். இந்நிலையில்,…

Read More

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது. கடந்த பிப் 14 ல் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற கான்வாயில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா இன்று மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த தாக்குதலுக்கு தேச பற்றுடன் அனைத்து தரப்பினரும் பாராட்டி வீரர்களுக்கு சல்யூட் அடித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள்…

Read More
1 3 4 5 6 7 81