ஒன்ராறியோவில் 184 புதிய COVID-19 வழக்குகள், மேலும் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன

ஒன்ராறியோவில் 184 புதிய COVID-19 வழக்குகள், மேலும் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன

புதிய வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு டொராண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் வின்ட்சர்-எசெக்ஸ் ஆகியவற்றிலிருந்து வருகிறது – வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாகாணத்தின் மீண்டும் திறக்கும் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தில் இருக்காது. புதிய வழக்குகள் மாகாணத்தை மொத்தம் 32,554 ஆகக் கொண்டுவருகின்றன, இது முந்தைய நாளை விட 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 2,538 இறப்புகள் மற்றும் தீர்க்கப்பட்ட 27,431 வழக்குகள் – முந்தைய நாளை விட 218 அதிகம், தீர்க்கப்பட்ட வழக்குகளின் போக்கு தொடர்ந்து செயலில் உள்ளவர்களை விட விரைவாக வளர்ந்து வருகிறது. மருத்துவமனையில் மற்றும் COVID-19 உடன் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தது, இருப்பினும் வென்டிலேட்டர்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது….

Read More

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் & இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலி

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் & இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலி

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தாகவும், இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. மற்றொரு செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு வட்டாரங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20…

Read More

கொரோனா வார்டுகளாக பயன்படும் ரயில் பெட்டிகள்

கொரோனா வார்டுகளாக பயன்படும் ரயில் பெட்டிகள்

ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் அவற்றை பல மாநிலங்கள் பயன்படுத்த துவங்கி உள்ளன. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் கொரோனா சிகிச்சை தனிமை வார்டுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பல மாதங்களுக்கு முன்னாலேயே வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் தற்போது பயன்பாட்டிற்கு வரத் துவங்கி உள்ளன. தற்போது டில்லி அரசால் 54 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உ.பி., யில் 70 ரயில் பெட்டிகளும், தெலுங்கானாவில் 60 ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில் 4 மாநிலங்களில் 204 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு…

Read More

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது அமெரிக்க ராணுவத்தின் பணி அல்ல – டிரம்ப்

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது அமெரிக்க ராணுவத்தின் பணி அல்ல – டிரம்ப்

மற்ற நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவது, அமெரிக்க ராணுவத்தின் பணி அல்ல. எதிரிகளிடம் இருந்து நம் நாட்டை பாதுகாப்பதே’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு என்பவர் சமீபத்தில், போலீஸ் அத்துமீறலில் கொல்லப்பட்டார். அப்போது ஏற்பட்ட வன்முறையை ஒடுக்க, ராணுவத்தை அனுப்புவதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.அதிருப்திஆனால், இதற்கு, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பார், கூட்டுப் படைகளின் தலைவர், ஜெனரல் மார்க் மில்லே ஆகியோர், பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ராணுவத்தின் ஒரு பகுதியான, நேஷனல் கார்டு என்ற சிறப்புப் படையை, வன்முறையை ஒடுக்க, டிரம்ப் பயன்படுத்தினார். டிரம்பின் இந்த நடவடிக்கைகளால், ராணுவத்தின் முன்னாள், இன்னாள்…

Read More

ஆப்கன் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலி

ஆப்கன் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலி

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலியானார்கள். காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் ஜூன் 11ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடந்த போது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் மசூதியின் இமாம் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் காபூலில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அந்த மசூதியின் இமாம் கொல்லப்பட்டார். ஆப்கன் அரசுக்கும், தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றிய இமாம்கள் மீது ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு உள்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் !!

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் !!

பஞ்சபூத நவகிரக ஹோமம் / யாகம் வரும் ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொழில்கள் செழிக்கவும் அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவும் நிகழ்த்தப்படும். உங்கள் ஒவ்வொருவருக்கும் பிரார்த்தனை செய்வோம். உங்களை சங்கல்பத்தில் சேர்க்க +1 647 964 4790 என்ற எண்ணில் உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திறம் (உங்களுக்குத் தெரிந்த விவரங்களை ) வாட்ஸ்அப் செய்யலாம். இது விளக்கத்துடன் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் இருக்கும். இந்த ஹோமம் / யாகத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும் என்பதால் அனைவரும் பயனடைய இந்த செய்தியை உற்றார்,உறவினர், நண்பர்கள் மற்றும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த ஹோமம் முடிந்த பிறகு வீடியோவை…

Read More

டில்லியில் கொரோனாவுக்கு 2,098 பேர் பலி !!

டில்லியில் கொரோனாவுக்கு 2,098 பேர் பலி !!

டில்லியில் மட்டும் கொரோனாவுக்கு 2,098 பேர் பலியாகி உள்ளதாக உள்ளாட்சி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. டில்லியில் இன்று(ஜூன் 11) புதிதாக 1,877 பேருக்கு கொரோனா உறுதியானது; 65 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பாதிப்பு 34,687 ஆக அதிகரித்தது. மொத்த பலியும் 1,085 ஆக உயர்ந்துள்ளது. டில்லி சுகாதாரத்துறை இவ்வாறு தெரிவித்திருக்கையில், டில்லி நகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய் பிரகாஷ், டில்லியில் 2,098 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், டில்லியில் 3 நகராட்சிகளிலும், ஜூன் 10ம் தேதி வரை கொரோனாவுக்கு பலியான 2,098 பேரின் சடலங்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன, அனைத்துமே கொரோனா உறுதி செய்யப்பட்ட சடலங்கள். இவ்வாறு…

Read More

கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!

கனடாவில் புதிதாக 473 பேருக்கு கொரோனா !!

கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் இன்று புதிதாக 473 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டின் மொத்த பாதிப்புகளில் பாதியளவு கியூபெக் மாகாணங்களில் பதிவாகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கனடியர்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் புதிதாக 473 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கனடாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 97,328 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் நோய் பாதிப்புக்கு புதிதாக 64 பேர் பலியாகினர்….

Read More

மூன்றாவது முறை தேதி அறிவிப்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

மூன்றாவது முறை தேதி அறிவிப்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது. இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதனுடன் பரவ ஆரம்பித்திருந்தது. வேட்பு…

Read More

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

உலகப் புகழ்பெற்ற பிரான்சின் ஈபிள் டவர் மூன்று மாதங்களுக்குப்பிறகு வரும் ஜூன் 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தின. ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13ல் மூடப்பட்டது. தற்போது பிரான்சில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற ஈபிள் டவர் ஜூன் 25ம் தேதி, நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் முதல் தளம் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனியே…

Read More
1 2 3 4 5 127