அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு – விழா கமிட்டி அறிவிப்பு
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற போராடிய அனைவருக்கும் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரை: வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் செல்லமாட்டோம் என்று கூறி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் போராட்டம் புரட்சியாக மாறி வெடிக்கவே, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டசபையில் இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்….
Read More