காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியிருந்தார். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (ஏப்.,18) கடிதம் எழுதியிருந்தார். தற்போது இந்தக் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலடி கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவை எதிர்த்துப் போட்டியிட முக்கிய ஆயுதமாக…

Read More

நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை

நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவரது உடல்நிலை மோசமாக உள்ள நிலையில், தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் விவேக். ‛மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். ரஜினி, கமல் தொடங்கி இப்போதுள்ள நடிகர்கள் வரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தார். நான் தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில்…

Read More

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார். 8 பலியானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்தில்ல் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதிக்கு வரும் சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. மாற்று பாதையை பயன்படுத்தும்படி மக்கள்கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More

நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்

நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்

நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை பொய்யாக உள்ளன’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமித்து தேங்கியுள்ள வழக்குகளில் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில் ”ஓய்வு பெற்ற நீதிபதிகளை குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிக நீதிபதிகளாக நியமித்து வழக்குகளை விசாரிக்க வைக்கலாம்” என்றார்.இதற்கு பதில் அளித்து நீதிபதிகள் கூறியதாவது:தற்காலிக நீதிபதிகளாக செயல்படுவதை ஓய்வு பெற்ற நீதிபதிகளில் பெரும்பாலோர் விரும்புவதில்லை. அவர்கள்…

Read More

விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

இலங்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (09 ஏப்ரல் 2021) அதிகாலை 1.40 மணி அளவில் அவரைக் கைது செய்ததாக, யாழ்ப்பாணம் போலீஸார் உறுதிப்படுத்தினர். யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர். யாழ்ப்பாணம் மாநகரத்தின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கும், வெற்றிலை எச்சில் துப்புவதற்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்ற முறையில் மணிவண்ணன் நேற்று முன்தினம் (7 ஏப்ரல்) தெரிவித்திருந்தார்.

Read More

நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். வயது 68. கவுண்டமணி-செந்தில் ஜோடி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்தது. செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்தார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த அவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி…

Read More

ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா – உ.பி.யில் கொடூரம் !!

ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா – உ.பி.யில் கொடூரம் !!

ஹிந்து சன்யாசி ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதியின் தலையை கொண்டு வருவோருக்கு பரிசு வழங்கப்படுமென இஸ்லாமிய தலைவர்கள் உ.பி யில் பகிரங்கமாக பத்வா மூலம் அறிவித்திருப்பிறது அனைவரையும் அதிர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதேபோல் சில மாதங்கள் முன் உ.பி யின் ஹிந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரிக்கு பத்வா அறிவிக்கப்பட்டு இதே சமுதாயத்தால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி. யின் காஜியாபாதில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் மஹந்த் ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதி சுவாமி, கோவிலின் உள்ளே சிவலிங்கத்தின் மேல் சிறுநீர் விட முயற்சித்த சிறுபாண்மை சமூகத்தவரை அடித்து துரத்திவிட்டதாக தெரியவருகிறது. இதை தொடர்ந்து தஸ்னா தேவி கோவிலின் மஹந்த் ஸ்ரீ நரசிங்கானந்த சரஸ்வதி சுவாமி கோவிலின் வாயிலில் “இங்கு…

Read More

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார். கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார். தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார்….

Read More

‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால தேவைக்காக மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக நிபுணர் குழு கூடியது. அதில், தற்போது ரஷ்யாவின் ‛ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்…

Read More

உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்

உலகம் செய்தி  பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக அமெரிக்காவில் வசித்துவரும் ஹாரி, தற்போது தாத்தா பிலிப் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்துள்ளார். கடந்த ஆண்டு பிரிட்டன் அரச குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகியோர் குழந்தை ஆர்ச்சியுடன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர். அங்கு தொழில் செய்து வந்த அவர்கள், சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய கருத்து பிரிட்டன் அரச குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தில் மேகன் மார்கலிடம் இனப்பாகுபாடு கட்டப்பட்டதாகத் தெரிவித்தனர்….

Read More
1 2 3 159