வன்னி மண்ணில் அளப்பரிய தார்மீகப் பணியாற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம்

வன்னி மண்ணில் அளப்பரிய தார்மீகப் பணியாற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம்

எமது தாயகத்தில் தமிழர் பிரதேசங்களில் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட பகுதிகளாக விளங்கும் வன்னி மண்ணும் அதனைச் சார்ந்த பிரதேசங்களும் பல்வேறு உதவிகளும் அணைப்பும் தேவையான பகுதிகளாக காணப்படுகின்றன. அங்கு உதவிகளும் உளரீதியான பாதுகாப்பும் தேவைப்படும் பிரிவினராக குழந்தைகளும் சிறுவர் சிறுமிகளும் ஆண் பெண் முதியோர்களும் உள்ளனர். அவர்களில் பலர் யுத்தம் காரணமாக எதிர்கொண்ட உடல் ரீதியானதும் உள ரீதியானதுமான பாதிப்புக்கள் பலரை மன நோயாளர்களாகவும் மாற்றியுள்ளன. இவ்வாறான மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும் எமது உறவுகளை பாதுகாக்கும் தார்மீகப் பணிகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களே எமது தமிழர் மண்ணில் இடைவிடாத பணிகளைச் செய்து வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களில் வவுனியாவில் இயங்கிவரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் அமைப்பின் சேவைகள்…

Read More

இனவாதப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வகுப்பு மக்களே!

இனவாதப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வகுப்பு மக்களே!

மதவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தாக்குதல்களுக்கு தூபமிடுவதை ஊக்குவிக்கும் செற்பாடுகள் போன்றவை, இலங்கைக்கு அருகில் உள்ள பாரதத் திருநாட்டில் மேற்கொள்ளப்படுவதால் அந்த நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ளுகின்றது. மதவாதப் பிடிக்குள் தத்தளிக்கும் பாரத தேசத்தில் இந்து முஸ்லிம் மோதல்களை தூண்டி நிற்பதில் பாகிஸ்த்தான் போன்ற நாடுகளும் அடங்குகின்றன. இதனால் அந்த நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மிக அதிகானவை ஆகும். இதேபோன்று இனவாத செயற்பாடுகளும் விமர்சனங்களும் மிகவும் மோசமான விதத்தில் பரவி நிற்கும் இலங்கையிலும் பாதிப்புக்கள் மக்களை வருத்தியும் வதைத்தும் நிற்கின்றன. அங்கு இனவாதத்தை தூண்டும் முதற் பிரிவினராக பௌத்த பிக்குகள் அல்லது அவர்களின் தலைமைப் பீடங்கள் காரணமாக அமைகின்றன. அவர்களைத் தொடர்ந்து…

Read More

உலக நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து, அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் கோரத்தின் 8வது ஆண்டு நினைவு நாளில் உலகெங்கும் கண்ணீர் வழிந்ததோடியது

உலக நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து, அரங்கேற்றிய முள்ளிவாய்க்கால் கோரத்தின் 8வது ஆண்டு நினைவு நாளில் உலகெங்கும் கண்ணீர் வழிந்ததோடியது

முள்ளிவாய்க்கால் என்னும் ஒரு மூலைக்கிராமம் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படுகின்றன ஒரு இரத்தம் தோய்ந்த சொல்லாகிவிட்டது. அங்கு 2009ம் ஆண்டு மே மாதத்தில் இரத்த ஆறு ஒரு புறமாய் ஓட, மனித சதைகள் சிதறியக் கிடக்க, பச்சிளம் பாலகர்களின் மழலை மொழியிலான ஓலங்கள் உரத்துக் கேட்க, போர் வெறி கொண்ட அகிலத்து நாடுகளின் இராணுவக்கொடியவர்கள் குண்டுகளை கொத்துக் கொத்தாக ஏவி விட அந்த அனர்த்தம் நடந்தேறியது. இலங்கை அரசும் அதன் அப்போதைய அதிபர் கொடுயோன் மகிந்தாவும் வேண்டி நிற்க வந்து குவிந்தன உலகப் படைகள். தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டாலும், ஆசியாவின் ஒரு சிறிய தீவிற்குள் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் விளைவாக ஒரு இனம் சார்ந்த அரசு உருவாகிவிடக்…

Read More

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் சூடப்பட்டதால்,சுமந்திரன் தொடர்ந்தும் ஜனாதிபதி“பக்கம்”தானா?

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் சூடப்பட்டதால்,சுமந்திரன் தொடர்ந்தும் ஜனாதிபதி“பக்கம்”தானா?

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் என்ற மூன்று வகையினருக்கும் வாழ்க்கைப் பிரச்சனை என்பதே இல்லை. அவர்களது பதவி, பணம், அதிகாரம், சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கு சுகபோக வாழ்வையே தொடர்ந்தும் தந்தவண்ணம் இருப்பன. ஆனால் இங்கே நாம் குறிப்பிடாத ஏனைய மக்கள் தொழிலாளர்கள் விவசாயக் கூலிகள், இடைத்தர அல்லது கனிஸ்ட தர அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்குமே தங்கள் குடும்பங்களின் சுமை அவர்களை சின்னாப்பின்னப் படுத்திய வண்ணமே இருக்கும் என்பது நிச்சயம். மறு பக்கத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணமற்போன உறவுகளை இழந்து தவிக்கும் அவர்களைப் பெற்றவர்கள், மணம் முடித்தவர்கள் என்ற உறவுநிலையை உடையவர்கள், தங்கள் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளமையால் வாழ்க்கையும்…

Read More

தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்

தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்

கடந்தவாரம் எமதுகதிரோட்டம் உலகெங்கும் பரந்துவாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைச் சென்றடைந்தது என்பதற்குச் சான்றாக பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இவற்றை நாம் எமக்குக் கிடைத்த பாராட்டுக்களாக நாம் பார்க்கவில்லை. மாறாக ஒரு சமூகக்கடமையின் ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றோம் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தஒரு தர்ம கைங்கரியத்தில் அவ்வாறான சிந்தனை உள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும். கடந்த வாரத்தின் எமது கதிரோட்டத்தின் தலைப்பு “தனிநபர்களிடம் தங்கியுள்ளநிதிதாயகம் நோக்கிவிரியவேண்டும்”என்பதே. இந்தஆசிரிய தலையங்கத்தைப் படித்துவிட்டு பலர் மௌனமாகவே உள்ளார்கள். சிலர் நினைக்கலாம் “இது மிகவும் கடினமான வேலை”என்று. இன்னும் ஒருசாரார் நினைக்கலாம் “இது எமக்கு வேண்டாத வேலை” என்று….

Read More

தனி மனிதர்களிடம் தங்கியுள்ள நிதி தாயகம் நோக்கி விரிய வேண்டும்

தனி மனிதர்களிடம் தங்கியுள்ள நிதி   தாயகம் நோக்கி விரிய வேண்டும்

எமது மண்ணின் விடுதலைக்காக தமது கைகளில் ஆயதங்களை ஏந்தி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் இராணுவக் கட்டமைப்பின் அபிவிருத்திக்காகவும் பலத்திற்காகவும் இன்னும் சாதாரணமாகச் குறிப்பிடுவதானால் தலைவர் பிரபாகரன் அவர்களின் எண்ணத்தின் படி போராளிகள் நல்ல சத்தான உணவுகளை உண்டு சுகதேகிகளாகவும் போராடக் கூடிய வலிமை பெற்றவர்களாகவும் இருப்பதற்காகவும், இன்னும் பல நிர்வாகத் தேவைகள் புலனாய்வுத் தேவைகள் ஆகியவற்றுக்காகவும், விடுதலை சார்ந்த கலை இலக்கியத் படைப்புக்களின் பரவலாக்கல் முயற்சிகளுக்கும் இயக்கத்தின் பிரச்சார திட்டங்களுக்கும், இராணுவத்தினரோடு போரிடுகின்றபோது காயமடைகின்ற அல்லது ஊனமடைகின்ற போராளிகளி;ன் நலன்களுக்காகவும் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் சேகரிக்கபபட்ட பாரிய நிதி 2009 ஆண்டுக்கு பின்னர் பலரால் முடக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் உலகெங்கும்…

Read More

முடிவுகளை எட்டாத சந்திப்புக்ளை நடத்தும் தலைவர்களால் மக்களுக்கு பலனில்லை

முடிவுகளை எட்டாத சந்திப்புக்ளை நடத்தும் தலைவர்களால் மக்களுக்கு பலனில்லை

பேயுலாவும் மண்ணில் பொழுதெப்போவிடியும் என்ற தலைப்பில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே கதிரோட்டப் பக்கத்தில் வாராந்த ஆசிரிய தலையங்கத்தை நாம் வடித்தது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். அவர்களின் இருப்பை உறுதி செய்யும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படையுங்கள் என்று விடுதலைப் புலிகளின் தலைமை சமாதானத் தூதுவர்கள் மூலம் அப்போது ஆட்சியில் அமர்ந்திருந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். “நீங்கள் சமாதானத்திற்கு வராவிட்டால் நாங்கள் யுத்தம் செய்து உங்களை அழித்து விடுவோம்” என்றுகர்ச்சித்தது சிங்கள ஆட்சி மன்றம். ஆமாம்! அப்போதும் அவர்கள் யுத்த வெறியர்களாகவே இருந்தார்கள். தங்கள் சொந்த மக்கள் தங்கள் நிலங்களில் சுய உரிமை பெற்றவர்களாக வாழ…

Read More

இலங்கையின் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள்; தங்கள் கட்சிகளின் போக்குகளுக்குஅப்பால் சென்று“போராளிகளாகத்”திகழ்கின்றனர்

இலங்கையின் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள்; தங்கள் கட்சிகளின் போக்குகளுக்குஅப்பால் சென்று“போராளிகளாகத்”திகழ்கின்றனர்

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள், இந்தியஅரசின் ஆலோசனையின் படிமுன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சியில் இணைக்கப்பட்டு ஒரே மாகாண சபை  நிறுவப்பட்டது. ஆனால் அந்த நிர்வாகம் வெற்றியளிக்காத ஒன்றாகவே நகர்ந்து சென்று, பின்னர் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் வடக்குமாகாண சபை என்ற இணைப்பு நீக்கப்பட்டு. தனித்தனியான மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. மேற்படி தனியான வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை ஆகியவற்றில் முதல் தேர்தலைச் சந்தித்தது கிழக்கு மாகாணசபையே. மேற்படித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக ஆசனங்களையும் இரண்டாவது எண்ணிகையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பெற்றன. மேற்படி கிழக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்னுலாப்தீன் அஹமட் ஒரு  செயற்திறன் மிக்க நிர்வாகியாக…

Read More

சூழ்ச்சிகளால், உலக அழிவு ஆர்ம்பமாகிவிட்டதா?

சூழ்ச்சிகளால், உலக அழிவு ஆர்ம்பமாகிவிட்டதா?

அமெரிக்காவில் ஓபாமா என்னும் அரசியல் தலைவனுக்குஅடுத்ததாக கிளாரி கிளிண்டன் ஜனாதிபதியாக வருவார் என்று உலகம் எதிர்பார்த்திருந்தது என்பதற்கு மேலாக, உலக மக்கள் அவரைபுதிய ஜனாதிபதியாக வரவேற்பதற்கு காத்திருந்தார்கள் என்பதே யதார்த்தம். கிளாரி அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், இந்தியாவிற்கு இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கு இருந்திருக்கும் என்று பல இந்தியப் பெண்மணிகள் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துப் பரிமாற்றத்தை நாம் செவி மடுத்திருந்தோம். ஆனால் யாருமே விரும்பாத ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கபடம் மறறும் சூழ்ச்சிகளால் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் எடுத்த பல முட்டாள்தனமான அரசியல் நடவடிக்கைகள், அமெரிக்காவில் இலட்சக் கணக்கான மக்களை ஆவேசத்துடன் பேசவைத்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ஓபாமா…

Read More

வடக்கு வாழ் தமிழர்களின் காவலர் விக்கினேஸ்வரனை அடித்து விரட்டச் சொல்லுகின்றான் மைத்திரியிஅமைச்சன் தயா ஸ்ரீ ஜய சேகர

வடக்கு வாழ் தமிழர்களின் காவலர் விக்கினேஸ்வரனை அடித்து விரட்டச் சொல்லுகின்றான் மைத்திரியிஅமைச்சன்  தயா ஸ்ரீ ஜய சேகர

இலங்கையில் தமிழர் தாயகம் என்று அழைக்கப்படும் வடக்கு மண்ணில் இயங்கிவரும் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.விக்னேஸ்வரன், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி. கொழும்புத் தலைநகரில் பல ஆண்டு காலமாக சைவத்தையும் தமிழ் மொழியையும் காத்துவரும் இந்து மாமன்றம் மற்றும் அது போன்றபல அமைப்புக்களின் காப்பாளராகவும் பணியாற்றி இடைவிடாத் தமிழ்த் தொண்டாற்றி வருகின்றார் அந்தப் பெருமகனார். இவ்வாறான ஒரு உயர்ந்தவரை “அடித்துவிரட்டுங்கள்” என்று காட்டுமிராண்டித் தனமான கூச்சலை எழுப்பியுள்ளான், தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவன். அவன் பெயர் தயாஸ்ரீ ஜயசேகர. மற்றவர்களுக்கு மரியாதை செய்வது எவ்வாறு என்று அறியாத இந்த அமைச்சன், எமது முதலமைச்சர் பேசுகின்ற விடயங்கள் அல்லது அவர்…

Read More
1 2 3 4 5 6