பாராளுமன்றப் உயிருடன் போராடும் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கா தொடர்ச்சியாகப் போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

பாராளுமன்றப் உயிருடன் போராடும் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கா தொடர்ச்சியாகப் போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது எதிர்கால உயர்விற்காக உயர் கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பலர் தொடர்ச்சியாக போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றார்கள். அவர்கள் போராடுவது தமக்காக அல்ல. யாருக்காக என்று அவர்களே கோசமிடுகின்றார்கள். கேட்டுப்பார்ப்போம். “எமக்காக போராடியவர்கள் உயிருடன் போராட நாம் வீட்டுக்குள் கிடப்பதா?;… தமிழ் அரசியற் கைதிகளுக்காக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தயாராவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக ஓரணியில் அணிதிரண்டு வருமாறு மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். கடந்த முப்பத்தொன்பது நாட்களாக மூன்று தமிழ் அரசியற் கைதிகள் இரண்டு கோரிக்கைகளினை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தில்…

Read More

அகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா

அகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா

இந்திய இராணுவம் எமது தாய் மண்ணில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தி;க கொண்டிருந்போது அறப்போர் செய்யப் புறப்பட்டான் திலீபன் என்னும் போராளி. அவன் கைகளில் ஆயுதம் இருந்தது. தகுந்த பயிற்சி பெற்று இராணுவத்தை எதிர்த்து போரிடக்கூடிய வல்லமை உடலில் இருந்தது. அவனது உள்ளத்தில் உறுதியிருந்தது. ஆனால் அவன் உண்ணாவிரதமிருந்து என் இனத்திற்கு விடுதலை வேண்டும் என்பதற்காக, தொடர்ச்சியாக அறப்போரை நடத்தினான். அகிம்சை என்னும் அறப்போர் செய்யும் ஆயுதத்தை உலகிற்கு வழங்கிச் சென்ற மகாத்மா காந்தி பிறந்த மண்ணை அப்போது ஆண்டவர்கள் தன் போராட்டத்தின் மகிமையை உணர்ந்து கொள்வார்கள் என்று அவன் நம்பியிரு;ந்தான். நாட்கள் நகர நகர தன் உயிர் பிரிவதிலும் பார்க்க ஒரு அகிம்சைப் போராளியி;ன் கோரிக்கையை…

Read More

இலங்கை அரசியலில் வெளிச்சத்திற்கு வரும் பல உண்மைகளால் மக்கள் தெளிவு பெறுவார்களா? அன்றி தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா?

இலங்கை அரசியலில் வெளிச்சத்திற்கு வரும் பல உண்மைகளால் மக்கள் தெளிவு பெறுவார்களா? அன்றி தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா?

உண்ணாவிரம் இருந்து தன்னை அழித்துக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த வாரத்தில் அவர் வெறுமனே பசித்திருக்கும் போராட்டத்தை நடத்தவில்லை, மரணத்தை அணைத்துக்கொள்ளும் நாளுக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் ஒரு செயற்கை நோயாளியாக இருந்து செத்து மடிந்திருக்கின்றார். இயற்கையாய் வரும் நோய்களைத் தாங்குவதே கொடுமை. அவ்வாறு இருக்கும் போது செயற்கையாக பசிஇருத்தலைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் போது உடலின் அனைத்து உறுப்புக்களும் இயல்பை இழந்து தவித்திருக்கும். அப்போது அந்த தியாகி அடைந்து உடல் வேதனை எவ்வாறு இருந்திருக்கும் என்று நாம் தற்போது எண்ணிப் பார்க்கின்றோம்.. அதற்கு காரணங்கள் பல உண்டு. தியாகி திலீபனுக்கு பின்னர் எத்தனையோ ஆயிரக்கணக்கான போராளிகள் தங்களை அழித்துக்கொண்டே…

Read More

அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆதரிக்கின்றது

அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆதரிக்கின்றது

உலகில் வேரூன்றியுள்ள வர்க்க வேறுபாடுகளையும் ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்தும் போன்றவை எவ்வாறு நடுத்தர மற்றும் தொழிலாள விவசாய மக்களை துன்புறுத்துவார்கள் என்றும் உலக முதலாளித்துவத்தாலும் சர்வதேச ஆட்சியாளர்களாலும் எவ்வாறான அநீதிகள் எதிர்காலத்தில் வர்க்க நலன் சார்ந்து அரங்கேறும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரேயே சமூகம் தொடர்பாகவும் சுரண்டல் தொடர்பாகவும் எழுதிவைத்துவிட்டு சென்ற லெனின், மார்க்ஸ் போன்ற சமூக, அரசியல் தத்துவார்த்த மேதைகள் போற்றுதற்குரியவர்கள். அவர்கள் சொல்லிய அனைத்தும் தற்போது நிகழ்கின்றன. உலகெங்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கைகோர்த்து நிற்கின்றார்கள். “உலகம் நீதியை நிராகரிக்கின்றது: அநீதியை ஆதரிக்கின்றது” என்ற தலைப்பில் முன்னர் ஒரு ஆசிரிய தலையங்கத்தை தீட்டியிருந்தோம். 2009ம் ஆண்டு எமது தாயக மண்ணில் உலக நாடுகள்…

Read More

தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சி தொடருகின்றதா?

தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சி தொடருகின்றதா?

புpராந்திய அதிகாரங்களை மக்களுக்கு ஓரளவு வழங்கும் வகையில் ஸதாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாகாணசபைகளுக்குள்ளே தங்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் இயங்கவேண்டிய வடக்கு மாகாண சபையின் நிலைகண்டு தமிழ் மக்கள தாங்கொணாத் துயரம் கொண்டுள்ளனர் என்பது தற்போது நன்கு புலனாகின்றது தமிழ்மக்களுக்கு உதவுவதை விடுத்து வடக்கு மாகாண சபையை தங்களின் சுய பதவிக்காக பயன்படுத்துகின்றனரே! என்ற வேதனை மக்களிடம் இருக்கவே செய்கிறது. இதற்கு காரணம் உண்மையான சேவை நோக்கம் இல்லாதவர்கள் அங்கு மாகாண சபை உறுப்பினர்கள் என்ற பதவிகளை தங்கள் வசம் வைத்திருப்பதே என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளார்கள். இது இவ்வாறிருக்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டுள்ள வடக்கு மாகாண சபை முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு…

Read More

ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்

ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்

எத்தனையோ ஆண்டு காலமாக தென்னிலங்கையில் அமைந்துள்ள பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் சிங்களக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் காலத்தைக் கடத்தி சி;ங்கள மக்களையும் ஏமாற்றி வருகி;ன்றார்கள். குறிப்பாக தற்போது ஆளும் தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படும் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்களே தவிர, சிங்கள மக்களுக்கு கூட பெரிதாக ஒன்று செய்து விடவில்லை. விலைவாசி அதிகரிப்பால், நடுத்தர மற்றும் ஏழை சிங்கள மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் போராட்டங்களை அவர்கள் நடத்த முடியவில்லை. இதைப்போலவே எமது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். தேர்தல் காலங்களில் வீர வசனங்களைப் பேசும் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் அங்குள்ள சலுகைகள் மற்றும்…

Read More

வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்த பின்னர் தமிழ்த் தலைமைகளால் எதைப்பற்றி பேச முடியும்?

வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்த பின்னர் தமிழ்த் தலைமைகளால் எதைப்பற்றி பேச முடியும்?

புpரிவினை இல்லாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதையே தான் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசியதை நாம் வரவேற்கின்றோம். சுpங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மக்களும் திரு சம்பந்தன் அவர்களது கூற்றை வரவேற்றிருப்பார்கள் என்பதை நாம் உணர்கின்றோம். இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான அளவில் இனவாதம் இருக்கவில்லை. ஏன்று சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள அரசியல்டி தலைவர்களும் தங்கள் வர்க்க இலாபங்கள் கருதி இனங்களுக்கு இடையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் சதியை அறிமுகம் செய்து அதன் மூலம் நாட்டுக்கு அநியாயத்தை ஏற்படுத்தி அதே வேளை மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தை பின்பற்றத் தொடங்கினார்களோ, அன்று தொடக்கம் நாட்டில்…

Read More

மைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா?

மைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா?

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் குரோதங்களம் தீவிரமாக வீக்கம் பெற்று எப்போது வெடிக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதை அரசாங்கம் மறைத்தும் மறுத்தும் செயற்பட்டாலும், இதே நேரத்தில் தலைவர்களை நம்பியிருந்த எமது தமிழ் மக்கள் செய்வது என்ன என்று தெரியாது திட்டாட்டமும் திகைப்பும் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். மாகாண மத்திய மற்றும் உள்;ராட்சி அரசுகளில் பலவிதமான அரசியல் பதவிகளை வகித்து வரும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் சலுகைகளையும் சுகபோகங்களையும் அனுபவித்த வண்ணம் “வருவது வரட்டும். எமக்கொன்றும் ஆகாது தானே” என்ற இறுமாப்பில் இருக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நாளுக்கு ஒரு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் அவர்களது “பணிகள்” நகர்கின்றன. பௌத்த பிக்குகள் மட்டும் இனவாதத்தைக் கக்குவதாகத்…

Read More

தாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன்

தாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும்  கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA  மதன்

ஈழத்தமிழர்கள் தமிழ் மொழியையும் தங்கள் தேசத்தையும் நன்கு நேசித்தவர்கள். கல்வியிலும் கலைகளிலும் உயர்ந்த பயிற்சியையும் உன்னதமான ஆற்றலையும் கொண்டு வாழ்வில் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் நாட்டை விட்டு ஓடி விடவேண்டும் என்ற சிந்தனையும் எம்மவர்களுக்கு இல்லாமல் இருந்த காலத்தில், உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சில தமிழர்கள் அங்கு உயர் பதவிகளைப் பெற்று தமிழர்களினதும் தமிழ் மொழியினதும் அடையாளத்தை பதித்த வரலாறு அறுபது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. ஆனால் இலங்கையில், போரும் போராட்டமும், தமி;ழ் இளைஞர்களின் எழுச்சியும் ஆரம்பமான பின்னர் அங்கு கல்வியும் கலைகளும் வர்த்தகமும் விவசாயமும் தொழில்நுட்பமும் தமிழர்களுக்கு கைகொடுக்க மறுத்தன. கற்றும் உழைத்தும் கரைகண்ட மேற்படி துறைகளில் அவர்களுக்கு வெற்றிகளை…

Read More

வடக்கு மாகாண சபையை மட்டுமல்ல கிழக்கையும் கூட தமிழரசுக் கட்சியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்

வடக்கு மாகாண சபையை மட்டுமல்ல கிழக்கையும் கூட தமிழரசுக் கட்சியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்

வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் அடிபணியாத போக்கினால் தங்கள்; “தந்திர” வேலைகளைச் செய்ய முடியாத சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்களின் “சதி” அரசியல் யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் செய்த அமைச்சர் குருகுலராஜாவை இராஜினாமாச் செய்யும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்த சில நிமிடத்தில் அவர் சிவிகே சிவஞானம் அவர்களோடு சேர்ந்து ஒன்றாகச் சென்று விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எதிராக ஆளுனரிடம் மனுக் கொடுத்தார்கள். இவ்வாறு சீரற்ற அரசியல் நிலை தோன்றி தடுமாறும் யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்துஇ…

Read More
1 2 3 4 5 6