மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற கலாசாரம் அரங்கேற இருக்கிறது என்கிறது “வலம்புரி”

மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற  கலாசாரம் அரங்கேற இருக்கிறது என்கிறது “வலம்புரி”

அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரி மேற்கண்டவாறு ஒரு செய்தியை பிரசுரித்துள்ளது. வழமையாக தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் தலைமைகளால் ஏற்படுத்தப்படும் அரசியல் சார்ந்த பின்னடைவுகள் போன்றவற்றை தகுந்த முறையில் சுட்டிக்காட்டு மேற்படி “வலம்புரி” பத்திரிகை இந்த செய்தியின் மூலம் சரியான ஒரு விடயத்தை எமது மக்களுக்கு சொல்ல முனைகின்றது என்ற எண்ணத்தோடு இங்கு மறுபிரசுரம் செய்கின்றோம்.- ஆசிரிய பீடம். மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது. ஆமாம்!புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான…

Read More

மாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை!

மாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை!

தமிழ் அரசியல்வாதிகளை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்பது தெரிந்த விடய மாயிற்று. அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியோ அன்றி தமிழத் தேசிய கூட்டமைப்போ, இரண்டு அரசியல் பீடங்களின் முக்கிய பணியாக உள்ளது, எப்படி மாண்பு மிகு வடக்கு முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களை மீண்டும் முதலமைச்சராவதைத் தடுப்பது என்பது தான். கடந்த வாரம் கனடாவிற்கு வருகை தந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நகரபிதா (மேயர்) திரு ஆனோல்ட் உடனான சில மணி நேர சந்திப்பின் போது கனடா உதயன் ஆசிரிய பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் இவைதான். “அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பான மேயராக இருந்தபோது அவர் தென்னிலங்கை…

Read More

ஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்

ஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்

கனடா என்னும் அற்புதமான தேசத்தில் உள்ள பல முக்கிய நகரங்களில் அரச இயந்திரத்தை இயக்கும் பிரதான இயந்திரமாக விளங்கும் ஒன்றாரியோ மாகாணம் எம் தமிழ் மக்களைப் பொறுத்தளவிலும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கனடாவில் ஏனைய மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும், ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள் – நான்கு இலட்சத்தைத் தாண்டியவண்ணம்- வாழ்ந்து வருகின்றார்கள் என்று கணக்கீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள்; அரசு சார்ந்த பதவிகளில் அமர்ந்த வண்ணம் எமது இனத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாகாணத்தில் தான் முதன் முதலாக ராதிகா சிற்சபைஈசன் என்னும் தமிழ் பேசும் பெண்மணி, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக…

Read More

மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்

மகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்

முன்னைய ஜனாதிபதியும் கொலைக்கரங்களுக்குச் சொந்தக்காரருமான மகிந்தா ராஜபக்;சா காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்களில் யார் யார், மகிந்தாவின் ஆட்சியை விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவ்வாறு மகிந்தாவின் ஏற்பாட்டில் கோத்தபாயவினால் திட்டமிட்டு கொல்லப்பட்ட லசந்த என்னும் சிங்கள மொழி பேசும் ஆங்கில பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொரூரமானது. இதைப்போன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன், மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் ஆகியோரது படுகொலைகள் எமது இனத்திற்கு இன்னும் சோகத்தை சுமந்து நிற்கும் சம்பவங்களாகவெ தொடர்கின்றன. அதிலும் சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த நாட்களில்…

Read More

ஓட்டாவா மாநாட்டின் தாக்கங்கள் இலங்கை வரை பாய்ந்து சென்றுள்ளன

ஓட்டாவா மாநாட்டின் தாக்கங்கள் இலங்கை வரை  பாய்ந்து சென்றுள்ளன

தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இன அழிப்பும் – நீதிக் கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும் என்னும் கருப் பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் கடந்த சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்ற பின்னர் மூன்றாவது நாளாக கனடிய பாhளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளமை ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியுள்ளது என பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ள விபரங்கள் இலங்கை வசை பாய்ந்து சென்றுள்ளன என்று பதிவு செய்துள்ளமை கனடா வாழ் தமிழ் மக்களுக்கு செவிகளில் நற்செய்திகள் வந்து குவிந்த உணர்வை தோற்றுவித்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். மேற்படி மாநாட்டை ஒட்டாவா பெருநகரில் பல்கலைக் கழக வளாகங்களிலும் பாராளுமன்றத்திற்குள்ளும்…

Read More

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

தற்போது மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோகணேசன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல புலமை உள்ளவராகத் திகழ்கின்றார். அத்துடன் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மலையகத்தின் தொழிற்சங்கத் தலைவரின் மகனாக இருப்பதால அவருக்கு போர்க் குணம் மிகவும் அதிகம். இதனால் அவர் துணிச்சலாக .கருத்துக்களைக் கூறிவருகின்றார். திரு.மனோகணேசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் நேரடியாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களோடு உரையாடினார். அத்துடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது,யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நேயர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார். மேற்படி நேயர் கேட்ட கேள்வியானது, தென்னிலங்கையிலிருந்து தாதிமாரும் சாரதிகளும் யாழ்ப்பாணத்தில் அரச பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இதை நீங்கள்…

Read More

இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்

இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித்  தமிழர்கள்

அரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். நாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே, ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம்…

Read More

அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா?

அரசியல் அதிகாரங்களுக்காக  இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா?

இலங்கையில் அரசியல் அதிகாரங்களுக்காகவும் பொருளாதாரப் பலத்தைத் தேடிக்கொள்வதற்காகவும் புதியதோர் அரசியல் கலாச்சாரம் அங்கு தோன்றி நின்று தாண்டவம் ஆடுகின்றது என்று நாம் முன்னர் பலதடவைகள் இந்தப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். பொதுத் தேர்தல் மட்டுமல்ல, நடைபெற்ற உள்ராட்சித் தேர்தல்களின் மூலமும் இதே அரசியல் அதிகாரத்தையும் மேலும் பலத்தையும் தேடிக்கொள்வதில் தான் அரசியல்வாதிகள் மீண்டும் அக்கறையாக செயற்பட்டார்கள். அத்துடன் ஆட்சியதிகாரம் இருந்தால் அரசாங்க வளங்களைகொள்ளை அடிக்கலாம் என்ற துரோகத்தனமான தீர்மானத்தோடுதான் வேட்பாளர்கள் அணிவகுத்து நின்றதை நாம் நேரில் கண்டோம். அதற்கு மேலாக, ஏற்கெனவே அரசாங்கத்தின் கஜானாவை கொள்ளை அடித்து சுவை கண்ட அணியினர் அதற்காகக் காத்திருப்பதையும் நாம் அவர்களது வார்த்தைகள் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. இப்போது அங்கு…

Read More

அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்

அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய  உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்

கடந்த 10ம் திகதி இலங்கையெங்கும் உள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான அங்கத்தவர்களையும் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு செல்லும் ஆசையோடு அந்த நாட்களில் சென்றவர்கள் எல்லோரும் இப்போது அதிகார பலத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் அங்கு செல்வதற்கு முனைகின்றார்கள். பாராளுமன்றத்திற்கு தெரவாகியுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கிட்டும் வாய்ப்புக்களும் வசதிகளும் வேறு எவருக்கும் கிடைக்காது என்ற காட்சிகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இப்போது அதிக மதிப்புள்ளவையாக மாறிவிட்டன. சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உயிருக்கு ஆபத்து நெருங்குகின்றது என்று தெரிவித்து விட்டால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நாட்டு மக்களின்…

Read More

வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018

வெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018

இந்த 2018ம் ஆண்டில் முதல் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த எஞ்சிய மாதங்கள் சிலருக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டன. தேர்தல் ஆண்டாக ஒன்றாரியோ மக்களுக்கு சூரியனைக் காட்டவிருந்த 2018 சூனியமாகப் போய்விட்டது பலருக்கு. பெற்றிக் பிரவுண் என்னும் இளம் தலைவன் குறிவைத்த “ஒன்றாரியோ முதல்வர்” பதவி விலகிப் போய்விட்டது அவரது அருகிலிருந்து. ஆமாம்! கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்காய் முதலில் அதன் தலைமைப் பதவியைப் பிடிக்கும் நோக்கோடு பாராளுமன்றப் பதவியைத் துறந்த பெற்றிக் பிரவுண் என்னும் இளம் அரசியல்வாதிக்;கு அ ருகிருந்து ஆதரவை வழங்கி அவரை அரியாசனத்தில் ஏற்றி வைக்க காத்திருந்தனர் எமது தமிழ் மக்கள்…

Read More
1 2 3 6