இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகே மிகவும் சுதந்திரமாக ஆடுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு யுவராஜ் சிங் திரும்பினார். கட்டாக்கில் அதிரடி சதம் கண்டார், பிறகு ஒரு அருமையான 45 ரன்களை அடுத்த போட்டியில் எடுத்து மீள்வரவில் நிரூபித்தார். நேற்று ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி அரைசதம் கண்டார், அதாவது டி20 அரைசதத்திற்கான சர்வதேச சாதனையை வைத்துள்ள யுவராஜ் நேற்று 23 பந்துகளில் அரைசதம் எடுத்தது இவரது குறைந்த பந்து டி20 அரைசதமாகும். “என்னுடைய பேட்டிங் கடந்த 2 ஆண்டுகள் ஏற்ற இறக்கமாக இருந்தது,…

Read More

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 10-வது சீசன் போட்டியின் தொடக்க விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. லகான் திரைப்பட பாடலுடன் தொடக்க விழா ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சியாக இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் சேவை புரிந்த சச்சின், கங்குலி, சேவக், லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சச்சின் உள்ளிட்ட 4 பேருக்கும், பிசிசிஐ தலைவர் சி.கே.கண்ணா, நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்தி, ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் முறையே நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னதாக சச்சின் உள்ளிட்ட 4 பேரும், இரு பேட்டரி கார்களில் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து…

Read More

புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்

புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்

புனே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை முழுக்க முழுக்கசுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றும்படி பி.சி.சி.ஐ., தரப்பில்கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டதாம். இது, இந்திய அணிக்கேபெரும் பாதிப்பாக அமைந்து விட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை முழுமையாகவென்றதால், ஆஸ்திரேலியாவை எளிதாக சாய்த்து விடும் எனநம்பப்பட்டது. கடைசியில் நிலைமை தலைகீழானது. புனே டெஸ்டில் இந்தியஅணி (105/1-0, 107/10), ஆஸ்திரேலியாவிடம் (260/10, 285/10) 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இப்போட்டியில், இந்திய அணியினர் ‘சொந்தக் காசில் சூன்யம்’ வைத்துக் கொண்டனர் என்பதுதற்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில், போட்டி துவங்கும் முன்பே ஆடுகளம் குறித்து பல்வேறுசர்ச்சை கிளம்பின. ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில, அனுமதியில்லாமல்…

Read More

மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. குழிபிட்ச் போடுதலின் ‘பயனை’ இந்தியா அடைந்தது! புனே டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸிலும் 107 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 333 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது. முதல் இன்னிங்சில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 11 ரன்களில் இந்தியாவை 7 விக்கெட்டுகளை இழக்கச் செய்த இடது கை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஓகீஃப் 2-வது இன்னிங்ஸிலும் அதே 35 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த டெஸ்ட்…

Read More

என்னை மதிப்பிடும் நேரமா இது? கோலி கேள்வி!!

என்னை மதிப்பிடும் நேரமா இது? கோலி கேள்வி!!

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக எனது திறமையை மதிப்பிட அதற்குள் இப்போது என்ன அவசரம் என்று விராட் கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.  தனது கேப்டன் பதவி குறித்து கோலி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் என்னை மதிப்பீடு செய்ய மாட்டேன். போட்டிகளில் வெற்றி பெறுவதையே முதல் குறிக்கோளாக வைத்துள்ளேன். விளையாட்டு மட்டுமல்ல எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியின் செயல்பாடை பொறுத்தே அதன் கேப்டனின் திறமையும் மதிப்பிடப்படும். அணி சரியாக ஆடாத போது தலைமைத்துவம் என்பது கட்டுப்பாட்டை இழக்கும். எனவே இந்திய அணியின் கேப்டனாக அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளுக்கு நானே தொடர்ந்தால் எனது தலைமைத்துவத்தை மதிப்பீடு செய்வேன். இப்பொழுது…

Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் 4 போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. முதல் போட்டி புனேவில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. அதற்கு அடுத்த போட்டி பெங்களுருவில் மார்ச் 4ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வென்ற வீரர்களே விளையாடுவர் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார், அபினவ் முகுந்த் ஆகியோர் வழக்கம் போல் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களை தவிர கருண்நாயர், ஹர்திக் பாண்டியா, சேதேஸ்வர் புஜாரா, அஜின்கிய ரஹானே, ராகுல், சாஹா, இஷாந்த் சர்மா,…

Read More

கோப்பை வென்றது இந்தியா!

கோப்பை வென்றது இந்தியா!

ஐதராபாத் டெஸ்டில், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ அசத்த, இந்திய அணி 208 ரன்கள்வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா வந்த வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் பங்கேற்றது. ஐதராபாத்தில் நடந்தஇப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 687/6 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 388 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 159/4 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தது. பின், 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைதுவக்கிய வங்கதேச அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. மகமதுல்லா (9), சாகிப் அல் ஹசன் (21) அவுட்டாகாமல்இருந்தனர். நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது….

Read More

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி தொடரும் என்று கும்பிளே பேட்டியளித்துள்ளார். ஐதராபாத் : இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுஅதன் மூலம் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில்…

Read More

சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா

சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சாஹல் 6 விக்கெட்டுகள் சாதனையுடன் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதனையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என்று தொடர் முழுதையும் கோலி தலைமையில் இந்திய அணி வென்றது. குழி பிட்ச், நடுவர் பிழைகள் என்று இங்கிலாந்து தோல்வி அடைந்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி ரெய்னா, தோனி, யுவராஜ் அதிரடியுடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 119/2 என்ற நிலையிலிருந்து 3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்கு 16.3 ஓவர்களில் ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது. சாஹல் 25…

Read More

இங்கிலாந்து பவுலர்களுக்கு கோலி பாராட்டு

இங்கிலாந்து பவுலர்களுக்கு கோலி பாராட்டு

கான்பூர் : உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக ஆடினர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் அனைத்திலும் அபாரமாக செயல்பட்டனர். வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். எதிரணி நன்றாக ஆடும் போது எழுந்து நின்று பாராட்ட வேண்டும். அப்படி தான் இங்கிலாந்தின் ஆட்டம் அமைந்தது. கடின முனைப்புடன் கொஞ்சம் பவுன்சாக சரியான அளவில் பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்களுக்கே ஒட்டுமொத்த சிறப்பும் உரித்தானது. இந்த…

Read More
1 4 5 6 7 8 9