‘அச்ரேக்கர் சார்! என் பேட்டிங் பற்றி இன்றாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா! சச்சின் நெகிழ்ச்சி

‘அச்ரேக்கர் சார்! என் பேட்டிங் பற்றி இன்றாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா! சச்சின் நெகிழ்ச்சி

2013, நவம்பர் 16, மும்பை வாங்கடே மைதானம் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது. 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்ற நாள் அது. மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள், முன்னணி வீரர்கள், முன்னாள் வீரர்கள் என்று பலர் குழுமியிருக்க, சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை செதுக்கிய பலர் குறித்து நினைவுகூர்ந்தார். தனது பயிற்சியாளர் அச்ரேக்கர் குறித்து குறிப்பிடுகையில், ”நான் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் இன்னும் கொஞ்சம் ரன்கள் அடித்திருக்கலாம், இப்படி இந்த ஷாட் அடித்திருக்கக்கூடாது என்று எப்போதும் எனக்கு ஆலோசனை கூறுவார். நான் திருப்தியடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால், அச்ரேக்கர் சார்! இன்றாவது நீங்கள் ஒருவார்த்தை என்…

Read More

தென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்கும் பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்

தென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்கும் பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்

2013-ல் கடைசியாக பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற போது பாகிஸ்தான் 0-3 என்று செம உதை வாங்கியது. அதுவும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜொஹான்னஸ்பர்கில் பாகிஸ்தான் அதன் மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரான 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தொடர் என்றாலே பாகிஸ்தான் வீரர்களுக்கு வயிற்றில் மோட்டார் ஓடுவது எதார்த்தமே. கடந்த 5 தென் ஆப்பிரிக்க தொடர்களில் பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தொடராகும் ஏனெனில் 3 டெஸ்ட்கள், 5 ஒருநாள், 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடுகிறது. டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது….

Read More

இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார்: இந்தியா வெற்றி; தொடரை கைப்பற்றி அசத்தல்

இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார்: இந்தியா வெற்றி; தொடரை கைப்பற்றி அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார். இவரது விளாசல் கைகொடுக்க இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது ‘டுவென்டி-20’ லக்னோவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக புவனேஷ்வர் இடம் பிடித்தார். இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ஷிகர் தவான் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. தாமஸ் பந்துவீச்சில் தவான்…

Read More

‘குல்பி ஐஸ்’ விற்கும் அர்ஜுனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்

‘குல்பி ஐஸ்’ விற்கும் அர்ஜுனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்

இந்திய குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார், 30. தேசிய சாம்பியன் ஆன இவர் 2008 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 2010 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றார். சிறந்த வீரருக்கான அர்ஜுனா விருது வென்றவர். ஹரியானாவை சேர்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் 17 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்றார். 2014ல் இவர் சென்ற கார், லாரியில் மோதி விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதன் பின் வாழ்க்கை திசை மாறியது. சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் தந்தை கடன் வாங்கினார். ஏற்கனவே பயிற்சிக்காகவும் கடன் வாங்கி இருந்தார். அரசும் கைவிட்டதால் வேறு வழியில்லாத நிலையில், கடனை அடைக்க தந்தையுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் ‘குல்பி ஐஸ்’ விற்கிறார்….

Read More

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

தவான், ரோஹித் சதம்; பாக்.,கை பந்தாடியது இந்தியா

ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த தவான், ரோகித் சர்மா சதம் கடந்தனர். இவர்களின் அபார ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த ‘சூப்பர்-4’ சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. இமாம் 10 ரன்களில் அவுட்டானார். குல்தீப் ‘சுழலில்’ பகர் (31) சிக்கினார். ஜடேஜா பந்தில்…

Read More

இந்தியா பாக்.,கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஊதி தள்ளியது

இந்தியா பாக்.,கை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஊதி தள்ளியது

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமது, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு பும்ரா, பாண்ட்யா சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. புவனேஷ்வரின் மூன்றாவது ஓவரில் இமாம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த புவனேஷ்வர்…

Read More

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா விராட் கோலியின் சதத்தின் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இமாலய இலக்கை நோக்கி தொடர்ந்து…

Read More

தென்னாபிரிக்காவுடனான ஆட்டத்தில், இலங்கை 20-20 கிண்ணத்தை சுவீகரித்தது

தென்னாபிரிக்காவுடனான ஆட்டத்தில், இலங்கை 20-20 கிண்ணத்தை சுவீகரித்தது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக கொக் 20 ஓட்டங்களைப் பெற்றார். அதன்படி இலங்கை அணிக்கு 99 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 07 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இலங்கை…

Read More

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்றிரவு மரணம் அடைந்தார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்றிரவு மரணம் அடைந்தார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து (1-0) மற்றும் வெஸ்ட் இண்டீசில் (1-0) டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்தது. அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வடேகரின் மறைவு குறித்து சச்சின் கூறியதாவது: வடேகர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90களில் அணி வீரர்களின் திறமைகளை…

Read More

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 107 ரன்னில் முடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. எந்த நேரத்திலும் மழை பெய்யலாம் என்ற சூழலில் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய இங்கிலாந்து அணி, சாம் குர்ரன் (40 ரன், 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்ததும்…

Read More
1 2 3 4 5 6 12