தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று வரலாறு

தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று வரலாறு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி நீக்கப்பட்டு ஷாம்சி இடம்பிடித்தார். இந்திய அணியில்…

Read More

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: விராட் கோலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “ ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தை, ஒருநாள் போட்டியிலும் தொடர விரும்பினோம். தென் ஆப்பிரிக்க அணியை 270 ரன்களுக்குள் மடக்கி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜின்கியா ரகானே உயர்தர…

Read More

முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை

முரளியைக் குறை கூறிய நடுவருக்கு நன்னடத்தை சிறை

உலகின் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைக் குறை கூறிய நடுவர் டெரல் ஹெயார், பணத் திருட்டில் நன்னடத்தைத் தண்டனை பெற்றார். 1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அணியில் இணைந்து சிலகாலமே ஆகியிருந்த முத்தையா முரளிதரனும் அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார். அத்தொடரின் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றிய டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றதாகத் தெரிகிறது என்று குறைகூறியிருந்தார். இதையடுத்து எழுந்த குற்றச்சாட்டுகளால் முரளிதரன் பல முறை தனது பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. முரளிதரன் மீது குறை கூறிய அதே நடுவர் டெரல் ஹெயார், சூதாட்ட மோகத்தினால் மதுபான விடுதியொன்றில் இருந்து கொஞ்சம்…

Read More

கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்

கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த் தீபாவளி யுவராஜ் சிங்கிற்கு தலைத்தீபாவளியாகும். இந்த நிலையில் வராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா கணவர் சோரவர் சிங், மாமியார் ஷப்னம் சிங் மற்றும் மைத்துனர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்து உள்ளார்.ஆகான்ஷா இது குறித்து தற்போது பேச மறுத்து விட்டார்.அக்டோபர் 21 அன்று முதல் விசாரணைக்குப் பின்னர் இந்த விஷயத்தில் அவர் பேசுவார்.ஆனால் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஆமாம் யுவராஜ், சோரவர்…

Read More

முக்கியக் கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தோம்: தோல்விக்குப் பிறகு கோலியின் வழக்கமான பேச்சு

முக்கியக் கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தோம்: தோல்விக்குப் பிறகு கோலியின் வழக்கமான பேச்சு

சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை நமக்கு சூசகமாகக் காட்டியதை பாகிஸ்தான் 90% காட்டியது, நேற்று மே.இ.தீவுகள் மீதமுள்ள 10%-ஐயும் காட்டி இந்திய அணியின் நட்சத்திர அந்தஸ்த்தை கேள்விக்குட்படுத்தியது. குறைந்த இலக்கை விரட்ட முடியாமல் தோல்வி கண்டது இந்திய அணி. இதே தோல்வியை மைக்கேல் கிளார்க், ஸ்மித், அல்லது மோர்கன், டிவில்லியர்ஸ் என்று யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள், கடுமையான வார்த்தைகளால்தான் இந்தத் தோல்வியை அறுதியிடுவார்கள். “இப்படிப்பட்ட ஆட்டம் பற்றி கூறுவதற்கென்ன இருக்கிறது?, படுமோசமாக ஆடினோம்” என்று வெளிப்படையாக கூறுவார்கள். ஆனால் இந்திய மனம் இதனை ஏற்றுக் கொள்ளாது, மோசமாக எது நடந்தாலும் ஒன்றுமே ஆகாதது போல் காண்பித்துக் கொண்டு இந்த மேலோட்டமான மனநிலையையே ஏதோ தன்னம்பிக்கை, ஆக்ரோஷம்,…

Read More

விக்கெட் கீப்பராக ரன்களில் தன்னைக் கடந்த தோனிக்கு கில்கிறிஸ்ட் வாழ்த்து

விக்கெட் கீப்பராக ரன்களில் தன்னைக் கடந்த தோனிக்கு கில்கிறிஸ்ட் வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் எடுத்த ரன்களில் கில்கிறிஸ்டின் 15,461 ரன்களை தோனி கடந்துள்ளார். இந்தச் சாதனை முறியடிப்புக்காக ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி பேட்ஸ்மென்/ விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்று 4-வது ஒருநாள் போட்டியில் தோனி கடந்த 16 ஆண்டுகளில் மிக மிக மந்தமான அரைசதத்தை எடுத்து எதிர்மறை விமர்சனத்துக்குள்ளான இன்னிங்ஸில் 54 ரன்களை எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 15,481 ரன்களை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் 9,496, டெஸ்ட் போட்டிகளில் 4,876, டி20 போட்டிகளில் 1209 ரன்கள். இந்நிலையில் பாராட்டு தெரிவித்த கில்கிறிஸ்ட், தனது சமூக வலைத்தளத்தில், “என் சாதனையை கடந்ததற்கு வாழ்த்துக்கள்,…

Read More

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக யுவராஜ்சிங், அஸ்வின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் மிடில் ஓவர்களில் ஒரேயடியாக தடுமாறிப்போனார்கள். விக்கெட்டை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்ப்பதில் முனைப்பே காட்டவில்லை. இதனால் ஆமைவேகத்தில் நகர்ந்த…

Read More

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் டெர்பியில் நேற்று நடந்த 11-வது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மந்தமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு தாறுமாறாக எடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்ட முடியாமல் தவித்தனர். முந்தைய ஆட்டத்தின் கதாநாயகி மந்தனா 2 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 8 ரன்னிலும் நடையை கட்டினர். சீரான…

Read More

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ரிஷாப், குல்தீப் யாதவ் சேர்ப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 23-ந்தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், ‘சைனாமேன்’ வகை பந்து வீச்சாளர் குல்தீப்…

Read More

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. கடைசி நேரத்தில் முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய முகமது அமிர் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ருமான் ரயீஸ் இடம் பெற்றார். இன்னொரு மாற்றமாக பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு ஷதப் கான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் கழற்றி விடப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும்…

Read More
1 5 6 7 8 9 11