என்னை மதிப்பிடும் நேரமா இது? கோலி கேள்வி!!

என்னை மதிப்பிடும் நேரமா இது? கோலி கேள்வி!!

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக எனது திறமையை மதிப்பிட அதற்குள் இப்போது என்ன அவசரம் என்று விராட் கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.  தனது கேப்டன் பதவி குறித்து கோலி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் என்னை மதிப்பீடு செய்ய மாட்டேன். போட்டிகளில் வெற்றி பெறுவதையே முதல் குறிக்கோளாக வைத்துள்ளேன். விளையாட்டு மட்டுமல்ல எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியின் செயல்பாடை பொறுத்தே அதன் கேப்டனின் திறமையும் மதிப்பிடப்படும். அணி சரியாக ஆடாத போது தலைமைத்துவம் என்பது கட்டுப்பாட்டை இழக்கும். எனவே இந்திய அணியின் கேப்டனாக அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளுக்கு நானே தொடர்ந்தால் எனது தலைமைத்துவத்தை மதிப்பீடு செய்வேன். இப்பொழுது…

Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் 4 போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. முதல் போட்டி புனேவில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. அதற்கு அடுத்த போட்டி பெங்களுருவில் மார்ச் 4ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வென்ற வீரர்களே விளையாடுவர் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார், அபினவ் முகுந்த் ஆகியோர் வழக்கம் போல் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களை தவிர கருண்நாயர், ஹர்திக் பாண்டியா, சேதேஸ்வர் புஜாரா, அஜின்கிய ரஹானே, ராகுல், சாஹா, இஷாந்த் சர்மா,…

Read More

கோப்பை வென்றது இந்தியா!

கோப்பை வென்றது இந்தியா!

ஐதராபாத் டெஸ்டில், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ அசத்த, இந்திய அணி 208 ரன்கள்வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா வந்த வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் பங்கேற்றது. ஐதராபாத்தில் நடந்தஇப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 687/6 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 388 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 159/4 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தது. பின், 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைதுவக்கிய வங்கதேச அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. மகமதுல்லா (9), சாகிப் அல் ஹசன் (21) அவுட்டாகாமல்இருந்தனர். நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது….

Read More

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்: கும்பிளே

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி தொடரும் என்று கும்பிளே பேட்டியளித்துள்ளார். ஐதராபாத் : இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுஅதன் மூலம் நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில்…

Read More

சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா

சாஹல் 6 விக்: 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து படுதோல்வி; தொடரை வென்றது இந்தியா

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சாஹல் 6 விக்கெட்டுகள் சாதனையுடன் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய அணி தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதனையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என்று தொடர் முழுதையும் கோலி தலைமையில் இந்திய அணி வென்றது. குழி பிட்ச், நடுவர் பிழைகள் என்று இங்கிலாந்து தோல்வி அடைந்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி ரெய்னா, தோனி, யுவராஜ் அதிரடியுடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 119/2 என்ற நிலையிலிருந்து 3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்கு 16.3 ஓவர்களில் ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது. சாஹல் 25…

Read More

இங்கிலாந்து பவுலர்களுக்கு கோலி பாராட்டு

இங்கிலாந்து பவுலர்களுக்கு கோலி பாராட்டு

கான்பூர் : உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக ஆடினர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் அனைத்திலும் அபாரமாக செயல்பட்டனர். வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். எதிரணி நன்றாக ஆடும் போது எழுந்து நின்று பாராட்ட வேண்டும். அப்படி தான் இங்கிலாந்தின் ஆட்டம் அமைந்தது. கடின முனைப்புடன் கொஞ்சம் பவுன்சாக சரியான அளவில் பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்களுக்கே ஒட்டுமொத்த சிறப்பும் உரித்தானது. இந்த…

Read More

கெளரவ டாக்டர் பட்டத்தை மறுத்த டிராவிட்! கொண்டாடும் ரசிகர்கள்!

கெளரவ டாக்டர் பட்டத்தை மறுத்த டிராவிட்! கொண்டாடும் ரசிகர்கள்!

கெளரவ டாக்டர் பட்டம் என்பது திறமை, பங்களிப்பு மற்றும் பிரபலம் போன்றவற்றுக்கான முக்கியமான அங்கீகாரம். இந்தக் கெளரவத்தை வேண்டாம் என்று சொல்லி மறுத்துள்ளார் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிடின் பல சாதனைகளுக்குக் கெளரவம் செய்யும் விதமாக அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கர்நாடகாவின் பெங்களூர்ப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. ஆனால் இதைப் பெற மறுத்துவிட்டார் டிராவிட். தானே தன் சொந்த முயற்சியில் விளையாட்டுத் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டத்தை வாங்கிக்கொள்வதாகப் பல்கலைக்கழகத்துக்குப் பதில் அளித்துள்ளார். இந்தத் தகவல் சமூகவலைத்தளத்தில் வெளியானவுடன் டிராவிடுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர் என்று ரசிகர்கள் டிராவிடைக் கொண்டாட இன்னுமொரு காரணமாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

Read More

இரானி கோப்பை சகா சதம்

இரானி கோப்பை சகா சதம்

குஜராத் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியின் விரிதிமன் சகா சதமடித்துகைகொடுத்தார். ரஞ்சி கோப்பை ‘நடப்பு சாம்பியன்’ குஜராத், ‘ரெஸ்ட் ஆப்இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட்போட்டி மும்பையில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் குஜராத் 358, ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ 226 ரன்கள் எடுத்தன. மூன்றாம்நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் குஜராத் அணி 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த குஜராத் அணிக்கு ஹர்திக்படேல் (0) ஏமாற்றினார். சிராக் காந்தி (70) நம்பிக்கை தந்தார். இரண்டாவது இன்னிங்சில் குஜராத்அணி 246 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ சார்பில்…

Read More

முதல்வன் தோனி

முதல்வன் தோனி

சர்வதேச அளவில் மூன்று விதமான ஐ.சி.சி., உலககோப்பை பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இவரது தலைமையிலான இந்திய அணி 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. பின், 2011ல் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது. கடந்த 2013ல் மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியைவென்றது. * ஆசிய கோப்பை தொடரில் தோனி தலைமையிலானஇந்திய அணி இரண்டு முறை (2010, 2016) சாம்பியன்பட்டம் வென்றது. இதன்மூலம் இவர், 5 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றமிகப் பெரிய தொடர்களில் அதிக முறை (5) கோப்பை வென்று தந்த கேப்டன்கள்பட்டியலில் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின்ரிக்கி பாண்டிங் தலா 4 முறை…

Read More

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம்

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களையும் கொண்டுள்ள தோனி,  நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இந்திய ஒருநாள் மற்றும்  20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயராக இருப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்ததும், கேப்டனாகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்,  தோனியின் முடிவு திடீரென…

Read More
1 8 9 10 11