அமரத்துவமாது. சுகந்தி சிவகுமார்

அமரத்துவமாது. சுகந்தி சிவகுமார்

தாயின் மடியில்: 03-12-1964 ஆண்டவன் திருவடியில்: 08-01-2011 அம்மா நீ எம்மை பிரிந்து சென்று 6 வருடம் கடந்தாலும் நீங்கவில்லை எம் மனதைவிட்டு உம் நினைவுகள் எம் வாழ்க்கைக்காக உம்மையே அர்ப்பணித்த எம் அன்பு அன்னையே… நல்ல வழி காட்டியாய் பாசமிகு வாழ்க்கைத் துணைவியாய் பாசமுடன் திகழ்ந்தவரே உம் ஆத்மா சாந்தியடைய எம் பெருமானை மனதார பிரார்த்திக்கின்றோம்… உங்கள் ஆத்மசாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்து நீங்காத உந்தனின் நினைவுகளுடன் வாழும் கணவன், பிள்ளைகள், தகப்பன், சகோதரி, சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் [apss_share] சிவகுமார் (கணவர்) 905-451-2711

Read More

திருமதி காங்கேசு சிவபாக்கியம்

திருமதி காங்கேசு சிவபாக்கியம்

அன்னை மடியில் 18-05-1922 ஆண்டவன் அடியில் 28-11-2016 வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மற்றும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த காங்கேசு சிவபாக்கியம் அவர்கள் 28-11-2016 அன்று திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் காலஞ்சென்றவர்களான நிவிற்றிகலை பிரபல வர்த்தகர் சண்முகம்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும் க.காங்கேசு (முன்னாள் அதிபர் மற்றும் ஸ்தாபகர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், கதிர்காமநாதன்,தர்மபாலன்(அவுஸ்த்திரேலியா) தியாகராசா, விமலேந்திரன் (கனடா) சோமநாதன்(கொழும்பு) மற்றும் காலஞ்சென்றவர்களான யோகவதி, மீனாம்பிகை, கோபாலபிள்ளை, பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், விமலசோதி (கொழும்பு), ஞானஸ்கந்தன்(கனடா), கலாஜோதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தவராசா(கொழும்பு), பிரேமலா, சர்வவேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும், அசலை-சிவகுமார், அமலன்-கார்த்திகா, நிமலி-ஐங்கரராஜ், சாமனை-டிலக்~ன், மாதங்கி-ஜமால்,…

Read More

அமரத்துவமாது காந்தமலர் சத்தியசீலன்

அமரத்துவமாது காந்தமலர் சத்தியசீலன்

மலர்வு: 28 – 03 – 1950 உதிர்வு: 01 – 12 – 2016 அன்புத் தெய்வமே உங்கள் அன்பு நிழலில் நாம் வாழ்ந்து காலத்தை கழித்தோம் கனிவான உங்கள் பேச்சில் நாம் அனைத்தையும் மறந்து வாழ்வு என்னும் அன்புக் கோட்டைக்குள் சரணடைந்து பறந்து திரிந்தோம் நீங்கள் இறைவன் பாதம் சரணடைந்து மாதங்கள், ஆண்டுகள் எத்தனை சென்றாலும் எம் மனதை விட்டு எங்கும் போகாமல் எம்மை வாழ்த்திக் கொண்டிருப்பிர்கள் என்பது உண்மை வாழ்வெதுவும் விதியின் கையில் வாழ நினைக்கும் போது பிரிவு எம்மை துரத்தி விட்டு உங்களை அழைத்துக்கொண்டது போராடினோம் உங்களை எம்முடன் வாழவைக்க முடியவில்லை கத்தினோம், கதறினோம், கண்ணீரை ஆறாக ஓடவிட்டோம் நாம்…

Read More

அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை (உயரப்புலம், ஆனைக்கோட்டை)

அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை (உயரப்புலம், ஆனைக்கோட்டை)

மண்ணில் : 09-04-1928 விண்ணில் : 03-01-2014 அன்புள்ள அம்மா! அன்பால் அரவணைத்து கரங்களில் ஏந்தி கனிவோடு பேசி எமக்காக வாழ்ந்தவரே… உண்மை அன்பின் ஒளியே… இன்னமும் உங்கள் முகம் தேடுகிறோம், வாடுகிறோம். கண்ணை இமை காப்பது போல் – எம்மை காலமெல்லாம் காத்து வந்தீர்களே… கயவர்கள் வந்த வேளையிலும் தனித்து எம்மை இரவும் பகலும் கலங்காது நின்று காத்து வந்தீர்களே… பசிக்காக எமக்கு நீங்கள் பாலூட்டவில்லை பாசத்தையும் வீரத்தையும் உங்கள் பாலில் சேர்த்தெமக்கு ஊட்டியபடி வளர்த்தீர்கள்… அம்மா, நீங்கள் ஊட்டிய பாலினால் இன்று நாம் பாரினிலே நிமிர்ந்து தளைத்து நிற்கின்றோம். ஆண்டுகள் மூன்றென்ன முந்நூறு ஆண்டுகள் சென்றாலும் எம் மூச்சு உள்ளவரை உங்கள் முகத்தை…

Read More

திருமதி. செல்லம்மா சின்னத்தம்பி (புங்குடுதீவு – 12ம் வட்டாரம்)

திருமதி. செல்லம்மா சின்னத்தம்பி (புங்குடுதீவு – 12ம் வட்டாரம்)

தோற்றம்: 16-05-1930 மறைவு: 25-11-2015 பாசத்தின் முடிவு துன்பம் மறைந்தவர் முடிவு மாயம் மோசத்தின் முடிவு தோல்வி முயற்சியின் முடிவு வெற்றி நாசத்தின் முடிவு நன்மை நரகத்தின் முடிவு சொர்க்கம் ஆசையின் முடிவு ஏக்கம் அழுகையின் முடிவு ஞானம் கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில் கவலைகள் தீரும் கொஞ்சல் தண்ணீர் விட்டாலும் காய்ந்த பூங்கொடி தழைத்தல் போல வெண்ணீல மான கண்ணில் விழுகின்ற அருவியோடு உன்மீது கொண்ட பாசம் உள்ளத்தை வாட்டுதம்மா பிறப்பிலும் அழுதேன் தாயின் இளப்பிலும் அழுதேன் வாழ்க்கைக் கிளப்பிலும் அழுதேன் ஒன்றிச் சேர்ந்தவர் சிலரால் சுற்ற மறைப்பிலும் அழுதேன் உள்ளே மனத்திலும் அழுதேன் ஊரார் இளப்பிலும் அழுவதெல்லாம் இது வரை அழுதுவிட்டேன் தாய்மையின் பிரிவை…

Read More

அன்புத்தெய்வங்களின் நினைவஞ்சலிகள் என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பில் வாழ்வான்

அன்புத்தெய்வங்களின் நினைவஞ்சலிகள் என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பில் வாழ்வான்

திரு. பேட்டி நீக்கிலஸ் பிறப்பு 28-05-1928 இறப்பு 02-12-1999 திருமதி. அன்ரோனியா பெலிசிய பிறப்பு 09-06-1931 இறப்பு 02-12-2006 அம்மா என் ஆசைத்தெய்வமே உடலும், உறவும், உயிரும் நீங்கள். பாசத்தின் ஒளிவிளக்கே அம்மா. கருத்தாக எம்மை சுமந்து கண்ணாக எம்மை வளர்த்து ஆளாக்கிய அன்புத் தெய்வதே உங்கள் முகம் பார்த்து பத்து வருடங்கள் ஆகியும் எம் இதயங்களில் வாழ்கின்றீர்களே ஆயிரம் உறவுகள் தேடி வந்தாலும் தாய் போல் உறவு வருமோ நீங்கள் டடாவிடம் சென்றீர்களோ? சென்றவிடம் யாதோ, உங்கள் அன்பு செல்வங்களின் பெருமை எல்லாம் உங்களுக்கே.. உங்களை கடவுளிடம் வேண்டி பாதார விந்தத்தில் மலர்தூhவி காத்துள்ளோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டிநிற்கும் பிள்ளைகள், [apss_share]

Read More

அமரத்துவமாது தவமணி ஜெயராசா

அமரத்துவமாது தவமணி ஜெயராசா

மலர்வு 05-03-1950 உதிர்வு04-11-2016 யாழ்பாணம் இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி ஜெயராசா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து எம்மிடம் நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அமரரின் இறுதிக்கிரியைகளின் போது திருமுறைகள் ஓதிய கனடா இந்து சமயப்பேரவைப் பெரியார்களுக்கும், அஞ்சலி உரைகள் நிகழ்த்தியும், அஞ்சலிப்பிரசுரங்கள் விநியோகித்தும், மலர்வளையங்கள் சார்த்தியும் துயர் பகிர்ந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனங்கனி;ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை 3300 McNicoll Ave ல் அமைந்துள்ள Baba Banqut Hall ல் நிகழவிருக்கும் அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியில் தவறாது பங்குபற்றுவதோடு, மதியபோசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு…

Read More

திருமதி. மாகிறற் ஆசீர்வாதம்

திருமதி. மாகிறற் ஆசீர்வாதம்

பிறப்பு: 17-01-1929 இறப்பு: 28-11-2016 யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மாகிறற் ஆசீர்வாதம் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற வெலிச்சோர், அன்னாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை பிலிப்பாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும், மொனிக்கம்மா (கனடா), யேசுதாசன் (கனடா), சூசைதாசன் (இங்கிலாந்து) மரியதாசன் (கனடா), கிறிஸ்ரினம்மா (கனடா), கேட்றூட்டம்மா (கனடா), அன்ரனிதாசன் (கனடா), ஜெயதாசன் (நோர்வே) ஆகியோரின் ஆருயிர் தாயாரும், காலஞ்சென்ற அடைக்கலம், மரியம்மா, செபஸ்தியாம்பிள்ளை அன்னப்பிள்ளை, பங்கிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், செபஸ்தி அமிர்தநாதன் (இலங்கை), காலஞ்சென்ற சபாரட்ணம் செந்தில்ராஜா, மனுவல் யேசுதாசன் (சட்டத்தரணி – கனடா), காணிக்கைமரியா…

Read More

திருமதி அன்னலட்சுமி பசுபதி

திருமதி அன்னலட்சுமி பசுபதி

தோற்றம் 05 -07-1937 மறைவு 28-11-2016 யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி பசுபதி அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இராசதுரை தம்பதிகளின் சிரேட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பசுபதி அவர்களின் அன்பு மனைவியும், மகேந்திரன் (கனடா), யசோதாதேவி (யசோ-இலங்கை), ரேணுகாதேவி (ரதி-கனடா), விஜேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரேதபு~;பம் (பு~;பம்), வசந்தகோகிலம் (லீலா), விஜயலக்சுமி (கமலா), காலஞ்சென்ற பு~;பராணி (ராசாத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகசோதி,வி~;வநாதன் (இலங்கை), பேரின்பநாதன், தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரியா,அர்ஜூன், நி~;யந்தன், து~pகா, நிவிதா, டிலாணி…

Read More

திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்)

திரு. நாகநாதி கணபதிப்பிள்ளை (சுருவில்)

(Former Civil Engineer Irrigation Department Sri Lanka) தோற்றம் 14-02-1931 மறைவு 30-11-2011 எங்கள் அனைவர் உள்ளங்களிலும் வசந்தம் வீசும் தென்றலாய் பாசத்தின் உறைவிடமாய் அன்பு உருவாய் அகல் விளக்காய், ஒளி வீசிக் கொண்டிருக்கும் எங்கள் பாசமிகு அப்பாவே! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று நீங்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறி இன்று இப்பாரினில் நாமும் சான்றோராய் வாழ வழி காட்டியதே! உங்கள் அன்பு அலைகளில் மிதந்த அந்த நாட்கள் உங்கள் இனிய கரத்தினால் ஆற்றிய அனைத்தையும் நினைத்து கண்ணீருடன் கை கூப்புகின்றோம். அப்பா ஆண்டுகள் ஐந்து கடந்தாலும் தெய்வமாகிவிட்ட உங்கள் நினைவுகள் நீங்காது நிலைத்து நிற்கும் [apss_share] மனைவி, பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள்,…

Read More
1 23 24 25 26 27 28