கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செய்தியாளர்களிடம் கூறும் போது போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு…

Read More

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து

மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக்கோரிய வழக்கறிஞர் அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் சரமாரி கேள்வி எழுப்பியதோடு, வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மெர்சல் படத்துக்கு ஒரே நாளில் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொது நல அக்கறை இருந்தால் திரைப்படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோருவதற்கு வரலாம். மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வரலாம். ஆனால் வரவில்லை. இது போன்றவற்றுக்கு எதற்காக வருகிறீர்கள்? மெர்சல் படத்துக்கு எதிராக இது போல் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்தப் படத்தில் என்ன தவறு…

Read More

கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு

கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு

தமிழ் பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘2.0’. ஷங்கர் இதை இயக்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமிஜாக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படும் 2.0 படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழா துபாயில் டவுன் டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க் வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது என்றார். மேலும், ரஜினிகாந்த் கூறியதாவது:- பணம் புகழைவிட விட மன அமைதிதான்…

Read More

நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் : கமலஹாசன்

நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் : கமலஹாசன்

நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்த கேள்வி பல்வேற கருத்துக்கள் நிலவி வருகிறது. ஆனால் தான் டுவிட்டர் மூலம் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக கமல் சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில் தனது பிறந்தநாளான நவம்பர் 7 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள். இளைஞர்களை ஒருங்கிணைக்க…

Read More

ஏண்டா தலையில எண்ண வைக்கேல்ல?

ஏண்டா தலையில எண்ண வைக்கேல்ல?

A new Tamil Movie is ready for Screening in Tamil Nadu, SriLanka and North America, including our Great Country Canada, soon. “Enda Thalaiyila Ennai vaikkella” (ஏண்டா தலையில எண்ண வைக்கேல்ல?” is the name of the Movie and the three female Producers are Singer and Music Director Rehena (Sister of A. R. Rehman), Mrs. Subha Thambipillai from Canada (WIfe of Mr. Yogi Thambipillai- Yogi & Partners) and Dr(Mrs) Indiran Asrvatham of Hope Medical Centre in Scarborough and…

Read More

நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு : உறுதி செய்தது வருமான வரித்துறை

நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு : உறுதி செய்தது வருமான வரித்துறை

தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது:நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற, சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரி ஏய்ப்பு செய்தோர்,…

Read More

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு

நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது.இந்த அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வந்த மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் திடீர்சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை. மத்திய கலால் துறையின்கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஷாலின் தயாரிப்பு நிறுவன ஜிஎஸ்டி முறையாக செலுத்தப்பட்டதா என ஆய்வு செய்தனர்.

Read More

ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு

ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு

விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. மெர்சல் திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன் பேசும்போது, “சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. அங்க மருத்துவம் இலவசம். ஆனால், 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்கும் இங்க இலவசமாக மருத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை” என்று வசனம் பெறுவதாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “சட்டங்களை மதிக்காமல் திரைப்படம் எடுக்கிறீர்கள். பிறகு சட்டத்தைப் பற்றியும் வரியைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். “தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள்…

Read More

இந்தியன்-2 கைவிடப்பட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியன்-2 கைவிடப்பட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு பிக்பாஸ் இறுதிப்போட்டியில் அறிவிக்கப்பட்டது, இதை தொடர்ந்து தற்போது இப்படம் நின்றுவிட்டதாகவும், இதில் கமலுக்கு பதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இதை அறிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறுகையில் ‘ஷங்கர் இயக்கத்தில் கமல் சார் இந்தியன் 2 நடிப்பது உறுதி. ஷங்கர் அவர்கள் 2.0 இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகவுள்ளார், அவை முடிந்த பிறகு அடுத்து இந்தியன்-2வில் கவனம் செலுத்துவார், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

Read More

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். தினத்தந்திக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில், ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் அரசியலுக்கு வரவில்லை. புதிய கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என பதிலளித்து இருந்தார். அரசியல் குறித்து பேசிவரும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடப்பதாக…

Read More
1 5 6 7 8 9 23