ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி

டிச.31-ல் ரஜினி புத்தாண்டு வாழ்த்து வேண்டுமானால் சொல்வார். அரசியல் பிரவேசம் பற்றி சொல்வாரா என்று கூற முடியாது. எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம் என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகரிடம் ரஜினியின் அறிவிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: ”ரஜினிக்கு அரசியல் புதிதல்ல, அதை அவர் அறியாதவரும் அல்ல. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் மூன்று முறை தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். மோடி பிரதமராக போட்டியிடும் முன் 5 லட்சம் கிலோ மீட்டர் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அது போன்று செயல்பட ரஜினியின் உடல் நிலை இடம் கொடுக்குமா? என்று எனக்கு தெரியவில்லை….

Read More

சினிமா விமர்சனம்: வேலைக்காரன்

சினிமா விமர்சனம்: வேலைக்காரன்

தொடர்ந்து வெற்றிகரமான படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து, பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவும் ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. கொலைகாரக் குப்பத்தில் வசிக்கும் அறிவு (சிவகார்த்திகேயன்) தங்கள் பகுதியில் ஒரு சமூக வானொலி ஒன்றை நடத்திவருகிறார். அதே குப்பத்தைச் சேர்ந்த காசி (பிரகாஷ் ராஜ்) அடிதடி, காசுக்காக கொலைசெய்வது என செயல்படுவதால், அந்தப் பகுதி இளைஞர்களும் அவரிடம் சேர்ந்து வேலைபார்க்கிறார்கள். தன் வானொலி மூலம் அந்த இளைஞர்களை மீட்க நினைக்கிறார் அறிவு. ஆனால், காசியால் அந்த வானொலி மூடப்பட, மிகப் பெரிய உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியில்…

Read More

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் இந்த பரிசீலனை நடந்தது. பிற்பகல் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை யின்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், வங்கி கணக்கு தொடர்பான விவரங் கள் சரியாக குறிப்பிடவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். எனவே, விஷால் மனுவை நிரா கரிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து…

Read More

“நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH)

“நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH)

SWETHA CINE ARTS (CANADA) ENTERPRISES என்னும் கனடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH) பாடல்கள் வெளியீடு கனடாவில் இன்று, டிசம்பர் மாதம் 2ம் திகதி ஸகாபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் இலவச நிகழ்வாக நடைபெறறதது இந்த புதுமையான நிகழ்வினைச் சிறப்பிக்கவென நேத்ரா திரைப்படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஸ் மற்றும் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் கதாநாயகன் தமன் ஆகியோர் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்கள். . அக்னி இசைக்குழுவின் அட்டகாசமான இசையில் இசைச் சக்கரவர்த்தி தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவின் இசையில் நேத்ரா திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழவும், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள்வத்ர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் நிறைந்து…

Read More

கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பான “ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் ஒரே நாளில் திரையிடப்படுகின்றது

கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பான “ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் ஒரே நாளில் திரையிடப்படுகின்றது

“ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் ஒரு கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பு. கனடாவின் யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம், திருமதி சுபா தம்பிப்பிள்ளை, டாக்டர் வாசுகி ஆசிர்வாதம் ஆகிய இரண்டு பெண்மணிகள் மற்றும் இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ. ஆர். ரெஹேனா ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி தொடக்கம் சுமார் 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ள இந்தத் திரைப்படம் கனடாவின் ஸ்காபுறோ நகரில் பின்ச்- மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் சரவணபவான் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வூட்சைட் சினிமாவில் டிசம்பர் மாதம் 16ம் திகதி சனிக்கிழமையும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 4.00…

Read More

இந்திரஜித்: சினிமா விமர்சனம்

இந்திரஜித்: சினிமா விமர்சனம்

தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இது. ஒரு தொன்மையான அதிசயப் பொருளை ஆய்வாளர்கள் தேடிச் செல்வது போன்ற சாகசக் கதை என்று கூறப்பட்டிருந்ததாலும் ட்ரைலர் சற்று வித்தியாசமாக இருந்ததாலும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு பொருள் பூமியில் வந்து விழுகிறது. அந்தப் பொருளுக்கு காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது. கோவாவில் உள்ள ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அந்தப் பொருளைத் தேட ஆரம்பிக்கிறார். அவரிடம்…

Read More

எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல: தீபிகாவுக்கு கமல் ஆதரவுக் குரல்

எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல: தீபிகாவுக்கு கமல் ஆதரவுக் குரல்

பத்மாவதி பட சர்ச்சை தொடர்பாக நடிகை தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல்கள் வலுத்துவரும் நிலையில், ”எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல” என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துவருகிறது. வரலாற்றைத் திரித்துக் கூறியிருப்பதாக ரஜபுத்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், திரைப்பட வெளியீடு தடைபட்டுள்ளது. இதற்கிடையில், பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. உச்சபட்சமாக, அவரது தலைக்கு ரூ.10 கோடி அறிவித்தார் ஹரியாணா பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளர். இதைச் சுட்டிக்காட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில், நடிகை…

Read More

இப்படை வெல்லும்

இப்படை வெல்லும்

ஐடி துறையில் வேலைபார்த்து, பிறகு பணியிழந்த மதுசூதனன் (உதயநிதி) பார்கவியைக் (மஞ்சிமா மோகன்) காதலித்து வருகிறான். இந்தக் காதலுக்கு காவல்துறை அதிகாரியான பார்கவியின் அண்ணன் (ஆர்.கே. சுரேஷ்) எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இதனால், பார்கவியும் மதுசூதனனும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் சிறையிலிருந்து தப்பிய சோட்டா (டேனியல் பாலாஜி) என்ற தீவிரவாதி சென்னையின் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறான். திரைப்படம் இப்படை வெல்லும் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே. சுரேஷ், டேனியல் பாலாஜி,ராதிகா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா இசை டி. இமான் இயக்கம் கௌரவ் சோட்டாவை யதேச்சையாக சந்திக்கும் மதுசூதனனும் குழந்தைவேலு (சூரி) என்ற டப்பிங் கலைஞரும் காவல்துறையால்…

Read More

கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன?- கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதும் நடிகை கஸ்தூரியின் கருத்தும்

கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன?- கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைதும் நடிகை கஸ்தூரியின் கருத்தும்

கந்துவட்டி கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நவம்பர் 5-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நெல்லை தீக்குளிப்புகளை மையப்படுத்தி ஓவியர் பாலா வெளியிட்ட கேலிச்சித்திரம் பேரதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் அதைத்தான் பாலாவும் எதிர்பார்த்திருப்பார், விரும்பியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இவரின் பல முந்தைய சித்திரங்களும், பொது நாகரிகத்தின் எல்லைகளை அறவே நிராகரிப்பவை. கூச்சநாச்சம் பார்க்காதவை. கருத்துக்களை வாழைப்பழ ஊசி போலோ, இல்லை ஆழம்பொதிந்த நையாண்டியாகவோ சொல்வது ஒரு வகை என்றால்,…

Read More

‘இது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு’: சென்னை மழை குறித்து கமல் ட்வீட்

‘இது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு’: சென்னை மழை குறித்து கமல் ட்வீட்

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் மழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தனது கவலையைக் குறிப்பிட்டு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். கூடவே ஒரு அறிக்கையையும் இணைத்துள்ளார். அதில், “சென்னையின் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர்வரத்து பாதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது….

Read More
1 4 5 6 7 8 23