அமலாபால் பிரிந்ததற்கு இதுதான் காரணமா?

அமலாபால் பிரிந்ததற்கு இதுதான் காரணமா?

நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யின் விவாகரத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரின் விவாகரத்துக்கு காரணம் மீண்டும் நடிக்க தொடங்கியதே என கூறப்படுகிறது. இவர் திருமணத்துக்கு பின் நடித்த படங்களில் கண்ணியமான வேடங்களிலேயே நடித்து வந்தார். ஆனால் தற்போது விவாகரத்துக்கு பின்னர் வடசென்னை படத்தில் மீ்ண்டும் கிளாமரான வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம். இதற்கு தடையாக திருமணம் இருந்தததால் தான் விவாகரத்து செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

Read More

சூர்யா, விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்

சூர்யா, விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்

சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜி, விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

இந்த காவிய திரைப்படம் டிராப் ஆவதற்கு விஜய் தான் காரணமா?

இயக்குனர் மணிரத்னத்திடம் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒரு படம் பொன்னியின் செல்வன். அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் பொன்னியின் செல்வன் படம் டிராப் ஆனது பற்றி பேசியுள்ளார். அதில் அவர், முதலில் படக்குழுவினர் கோவில்களில் படமாக்க சரியான உத்தரவு வாங்கவில்லை. பின் செட் போட்டு எடுக்கலாம் என்று பார்த்தாலும் ரூ. 50 கோடி வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படம் டிராப் ஆனது என்று கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்யை படக்குழுவினர் அணுகியதாக ஒரு தகவலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

தல அஜித்தின் சொதப்பல்கள்- ஸ்பெஷல்

தல அஜித்தின் சொதப்பல்கள்- ஸ்பெஷல்

தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். ரஜினியின் ஓப்பனிங் சாதனையையே வேதாளத்தில் முறியடித்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த 4 படங்களும் சூப்பர் ஹிட் தான், இந்நிலையில் இப்படி தமிழ் சினிமாவையே கலக்கி வரும் அஜித் தன் திரைப்பயணத்தில் சொதப்பிய தருணங்களை பார்க்கலாம். காதல் கோட்டைக்கு பிறகு வந்த சோகம் அஜித் ஆரம்பத்திலேயே சுமாரான ஹிட் படங்களை கொடுத்து தான் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார், இவருக்கு ஆசை படம் பெரிய ஹிட் படமாக அமைந்தாலும், காதல் கோட்டை தான் மெகா ஹிட் படமாக அமைந்தது, பல பெண்களின் மனதை கொள்ளையடித்த அஜித் அடுத்து ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்தால்…

Read More

சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா?

சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா?

சூர்யா, அஜித் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் இருவருடைய படங்களும் மோதி தானே ஆகவேண்டும். சூர்யா பல பேட்டிகளில் அஜித் மறுத்த பல படங்களில் நான் நடித்துள்ளேன், அந்த படங்கள் அனைத்துமே ஹிட் தான் என்று கூறியுள்ளார். தற்போது அதேபோல் விக்னேஷ் சிவன் முதலில் அஜித்திடம் தான் ஒரு கதையை கூறியுள்ளார், அவர் மறுக்கவே அந்த வாய்ப்பு சூர்யாவிற்கு வந்துள்ளது. அவரும் செண்டிமெண்ட் காரணமாக உடனே ஓகே சொல்லிவிட்டாராம், அதாவது அஜித் மறுத்த கதை நமக்கு ஹிட் அடிக்கும் என்ற செண்டிமெண்ட் தானாம்.

Read More

அம்மாவின் முதல் அன்பளிப்பை பராமரிக்க தவறிய ரஹ்மான்: நெட்டிசன்கள் விமர்சனம்

அம்மாவின் முதல் அன்பளிப்பை பராமரிக்க தவறிய ரஹ்மான்: நெட்டிசன்கள் விமர்சனம்

ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான், உலக சினிமா வியந்து பார்க்கும் அளவுக்கு இன்று வளர்ந்து விட்டார். ஆனாலும் என்றைக்குமே தான் ஒரு மிகப்பெரிய இசைமைப்பாளர் என்ற பந்தா அவரிடம் கிடையாது. இந்நிலையில் தன் அம்மா தனக்கு ஆரம்ப காலத்தில் பரிசாகக் கொடுத்த காரை படமெடுத்து இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 1986ம் ஆண்டு போர்டு கீ ப்ளேயராக இருந்த போது அம்பாஸிடர் காரை வாங்கி கொடுத்துள்ளார், ஆனால் இந்த காரை பராமரிக்க முடியாத நிலையில், ஒரு மரத்தடியில் தூசி படிந்து காயலான் கடைக்குப் போடும் நிலையில் காணப்படுகிறது. இந்தக் கார் படத்தைப் போட்டு, ‘என் அம்மா 1986ல் எனக்காக வாங்கித் தந்த முதல் கார்’ என்று…

Read More

சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா?

சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா?

சூர்யா, அஜித் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் இருவருடைய படங்களும் மோதி தானே ஆகவேண்டும். சூர்யா பல பேட்டிகளில் அஜித் மறுத்த பல படங்களில் நான் நடித்துள்ளேன், அந்த படங்கள் அனைத்துமே ஹிட் தான் என்று கூறியுள்ளார். தற்போது அதேபோல் விக்னேஷ் சிவன் முதலில் அஜித்திடம் தான் ஒரு கதையை கூறியுள்ளார், அவர் மறுக்கவே அந்த வாய்ப்பு சூர்யாவிற்கு வந்துள்ளது. அவரும் செண்டிமெண்ட் காரணமாக உடனே ஓகே சொல்லிவிட்டாராம், அதாவது அஜித் மறுத்த கதை நமக்கு ஹிட் அடிக்கும் என்ற செண்டிமெண்ட் தானாம்.

Read More

பொது மேடையில் கீர்த்தி சுரேஷை கலாய்த்து தள்ளிய சிவகார்த்திகேயன்

பொது மேடையில் கீர்த்தி சுரேஷை கலாய்த்து தள்ளிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் யார் மாட்டினாலும் கலாய்த்து எடுத்துவிடுவார். அந்த வகையில் அவர் படத்தின் ஹீரோயினை மட்டும் விட்டுவிடுவாரா என்ன?, அவரும் இவரிடம் சிக்கிவிட்டார். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு கேம் ஷோவில் ரெமோ நாயகி கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டுள்ளார். அதில் ஒரு உதவிக்காக சிவகார்த்திகேயனுக்கு போன் செய்துள்ளார். அப்போது தொகுப்பாளர் கீர்த்தி நன்றாக விளையாடுகிறார் என கூற, சிவகார்த்திகேயன் ‘அந்த பொண்ணு நல்லா விளையாட்றதே ஆச்சரியம் தான் சார்’ என கூறி கலாய்த்துவிட்டார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பல கவுண்டர் டயாலக்குகளால் அவரை கலாய்த்து தள்ளி விட்டார்.

Read More

கடும் அப்செட்டில் முருகதாஸ்?

கடும் அப்செட்டில் முருகதாஸ்?

துப்பாக்கி, கத்தி என மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் ஹிந்தியில் எடுத்த கஜினி, ஹாலிடே ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வந்த பாலிவுட் படம் அகிரா, இப்படம் பெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்த்தார்கள். ஆரம்பத்தில் நல்ல வசூல் வந்தாலும், வழக்கம் போல் பாலிவுட் மீடியாக்கள் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம் பரப்ப தொடங்கியது. இதனால், படக்குழு மிகவும் அப்செட்டில் உள்ளதாம், முருகதாஸும் வருத்தத்தில் உள்ளார்.

Read More

இந்த முறையும் இப்படியா? சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்

இந்த முறையும் இப்படியா? சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்

விக்ரம் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர். இவர் உண்மையாகவே ஒரு மாஸ் ஹிட் கொடுத்து பல வருடம் ஆகிவிட்டது. இந்த குறையை இருமுகன் போக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தார்கள், ஆனால், படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஆனால், ஒரு சிலர் நம்பிக்கையாக இந்த படம் சூப்பர் ஹிட் என கூறி வருகின்றனர், பார்ப்போம் வரும் நாட்களின் வசூலை வைத்து படம் ஹிட்டா? அல்லது இந்த முறையும் தோல்வியா? என்று.

Read More
1 22 23 24 25